சென்னை: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் தொடர்பாக இதுவரை வந்துள்ள எக்ஸிட் போல் முடிவுகளில் வெளியாகியுள்ள கருத்துக் கணிப்புகளின்படி திமுக ஆட்சியமைக்கும் என்று தெரிகிறது. அதேசமயம், தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசியல் சக்தியாக உருவெடுப்பதும் உறுதியாகியுள்ளது.
தேர்தல் களத்தில் முதல் முறையாக இறங்கிய தவெக 3வது பெரிய கட்சியாக வருவதோடு, இரட்டை இலக்கத்தில் வெற்றியையும் பெறும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் கூறுவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அதாவது திரையுலகிலிருந்து அரசியலுக்கு வந்த நடிகர்களில் எம்.ஜி.ஆருக்கு அடுத்து ஓரளவுக்கு வெற்றி பெற்றவராக பார்க்கப்படுபவர் விஜயகாந்த்தான். ஆனால் நடப்பு தேர்தலில் விஜயகாந்த்தையும் மிஞ்சும் அளவுக்கு எடுத்த எடுப்பிலேயே இரட்டை இலக்கத்தில் விஜய் வெல்வது முக்கியமானதாக கருதப்படுகிறது.

தேமுதிக தான் சந்தித்த முதல் சட்டசபைத் தேர்தலில் கிட்டத்தட்ட 8 சதவீத வாக்குகளுடன் ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. ஆனால் விஜய்யின் தவெகவுக்கு இரட்டை இலக்கத்தில் வெற்றி கிடைப்பதாக கூறப்படுவது முக்கியமானது.
இது, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவ அரசியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக, இதுவரை அதிமுக அல்லது மாற்று சக்திகளை நோக்கி நகர்ந்த இளைஞர்களின் வாக்குகள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் வாக்குகள் விஜய்யின் பக்கம் சரிந்துள்ளதாகவும் தெரிகிறது.
தவெகவினர் தாங்கள் ஆட்சியைப் பிடிக்கப் போவதாக கூறி வருகின்றனர். ஆனால் எக்ஸிட் போல் முடிவுகள் வேறு மாதிரியான முடிவுகளையே காட்டுகின்றன. ஆனால் இதிலேயே விஜய் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கிடைக்கும் என்று கூறப்படுவதே அந்தக் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றிதான். அதிலும் 15 இடங்களுக்கு மேல் கிடைத்தால் அது விஜய்க்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகவும் பார்க்கப்படும்.
காரணம் - இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை விஜய் தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்யவில்லை. குறிப்பிட்ட இடங்களில்தான் பிரச்சாரம் செய்தார். பல சவால்களையும் சந்தித்தார். இதையெல்லாம் தாண்டி எக்ஸிட் போல்களில் கூறப்படுவது போல அவருக்கு இரட்டை இலக்கத்தில் சீட் கிடைத்தால் அதுவெ அக்கட்சிக்கு பெரிய வெற்றியாக கூறலாம்.
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
வாஸந்திக்குப் பிடித்த பாஸந்தி!
{{comments.comment}}