டெல்லி: ரயில்வே தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 13ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் முடிய உள்ள நிலையில், தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில், பட்டதாரி பதவிகளுக்கான ஆர்ஆர்பி என்டிபிசி 2024 தேர்வுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 13ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் காலம் அவகாசம் தரப்பட்ட நிலையில், தற்போது அக்டோபர் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதே போல், தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அக்டோபர் 21,22ம் தேதிக்குள் தங்க் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படிவ திருத்தத்திற்கு அக்டோபர் 23 முதல் 30 வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இளங்கலைப் பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 36 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும், பட்டதாரி பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 முதல் 33 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!
செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?
செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி
திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!
Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!
பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?
கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக
பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்
மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை
{{comments.comment}}