நியூயார்க்: சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கை உருவாக்கி ஒட்டுமொத்த உலகத்தின் போக்கையும் புரட்டிப் போட்ட மார்க் சக்கர்பெர்க் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
உலகத்தின் போக்கை முற்றிலுமாக மாற்றிப் போட்ட பெருமை 3 பேருக்கு உண்டு.. கூகுள், பேஸ்புக் மற்றும் டிவிட்டர். அப்படியே இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவையும் இதனுடன் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் கூகுள், பேஸ்புக், டிவிட்டர் செய்த மாயாஜாலங்களும், மாற்றங்களும் நவீன உலகின் மிகப் பெரிய மாற்றத்திற்கான காரணிகளாக எப்போதும் இருக்கும்.
அப்படிப்பட்ட முக நூலை (facebook) உருவாக்கிய மார்க் சக்கர்பெர்க் இன்று தனது 41வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். மார்க், 1984 ஆம் ஆண்டு மே 14ஆம் தேதி அமெரிக்கா, நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெய்டு பிளேயின்ஸ், பிறந்தவர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரிக்குள் மற்ற மாணவர்களுடன் தொடர்புகொள்ள ஆரம்பிக்க நினைத்துதான் முகநூலை ( Facebook) உருவாக்கினார்.

பின்னாளில் இதை விரிவுபடுத்தி இன்றைய பேஸ்புக்கை உருவாக்கினார். தொழில்முனைவோராக, மென்பொருள் பொறியாளராக வலம் வந்த மார்க், உலகின் மிகப்பெரிய சமூக வலைதளங்களில் ஒன்றாக பேஸ்புக்கை உருவாக்கியது வரலாறு.
மார்க் சக்கர்பெர்க் பள்ளி நாளில் கணினி மற்றும் புரோகிராம்மிங் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அவர் ஒரு சிறிய சமூக வலைத்தளத்தை பள்ளி நண்பர்களுக்காக உருவாக்கினார். பிறகு ஹார்வார்டில் படிக்கும்போது, " FaceMash" என்ற ஒரு வலைத்தளத்தை உருவாக்கினார். இதன் மூலம் மாணவர்கள், கல்லூரி மாணவர்களின் புகைப்படங்களை மதிப்பீடு செய்ய முடிந்தது. இது சர்ச்சையை ஏற்படுத்தினாலும், சக்கர்பெர்கின் புரோகிராம்மிங் திறமை உலகெங்கும் பரவியது.
Facebook பிறப்பு
2004 ஆம் ஆண்டு, மார்க் தனது நண்பர்களான எட்வர்டோ செவரின், ஆண்ட்ரூ மெக்கொல்லம், டஸ்டின் மோஸ்கோவிட்ஸ், கிறிஸ் ஹ்யூஸ் ஆகியோருடன் இணைந்து " தி ஃபேஸ்புக்"என்ற வலைத்தளத்தை உருவாக்கினார். ஆரம்பத்தில், ஹார்வார்டு மாணவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கக் கூடியதாக இருந்தது.
பின்னர், பிற கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுமக்கள் வலைதளங்களில் ஒன்றாக விரிவடைந்தது. 2005 ஆம் ஆண்டு facebook என பெயர் மாற்றம் கண்டது. 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 2, அன்று ஃபேஸ்புக்கில் 350 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டு Facebook பங்கு சந்தையில் நுழைந்தது. 2021 ஆம் ஆண்டு Facebook நிறுவனத்தின் பெயர் " Meta Platforms" என மாற்றப்பட்டது.
இன்று, Facebook என்பது உலகின் மிகப்பெரிய சமூக வலைதளங்களில் ஒன்றாக உள்ளது, இதில் பில்லியன் கணக்கான பயனர்கள் உள்ளனர். இது பல சமூகப் பணிகள் மற்றும் கல்வித் துறையில் பெரும் பங்களிப்பை கொடுத்து வருகிறது. தொடர்புகள் இல்லாமல் கிடந்த உலகத்தை மிகப் பெரிய கிராமமாக மாற்றிய பெருமை இதற்கு உண்டு. எந்த மூலையில் இருந்தாலும் உடனடியாக ஒருவருடன் பேச, தொடர்பு கொள்ள உதவுகிறது பேஸ்புக்.
மார்க் சக்கர்பெர்க் சிறிய வயதிலிருந்து கணினி அறிவியல் மீது ஆர்வம் கொண்டிருந்தார். அவரது கடுமைாயன உழைப்பும், புதிய சிந்தனையும், அவரை உலகின் முன்னணி தொழில்முனைவோரில் ஒருவராக மாற்றியுள்ளது. இவரின் விடாமுயற்சியால் இன்று முகநூல் பயன்பாடு உலகத்தை மாற்றி அமைத்துள்ளது நினைவிருக்கலாம்.
சமூக வலைதளங்களில் முடி சூடா மன்னனாக திகழும் மெட்டா நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்குக்கு நாமும் பேஸ்புக் மூலமாக வாழ்த்து தெரிவித்து மகிழ்வோம்.
Happy birth day Mr Mark!
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}