புனே: மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் நடிகை சங்கீதா பிஜ்லானிக்கு சொந்தமான பண்ணை வீடு சேதப்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த பொருட்கள் திருடப்பட்டதாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கும் மேலாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார் சங்கீதா. இதைப் பயன்படுத்தி விஷமிகள் உள்ளே புகுந்து சூறையாடியுள்ளனர். இதுகுறித்து புனே ரூரல் போலீசில் நடிகை சங்கீதா பிஜ்லானி புகார் அளித்துள்ளார்.
வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டு, கட்டில், குளிர்சாதன பெட்டி மற்றும் CCTV கேமராக்கள் உட்பட பல வீட்டு உபயோகப் பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன. ஒரு தொலைக்காட்சி பெட்டியும் காணாமல் போயுள்ளது. தந்தையின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பண்ணை வீட்டிற்கு வர முடியவில்லை என்று சங்கீதா பிஜ்லானி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இன்று நான் எனது இரண்டு வேலைக்காரர்களுடன் பண்ணை வீட்டிற்கு சென்றேன். அங்கு கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். உள்ளே சென்று பார்த்தபோது ஜன்னல் கம்பிகள் சேதமடைந்திருந்தன. ஒரு தொலைக்காட்சி பெட்டி காணாமல் போயிருந்தது. மற்றொன்று உடைந்து இருந்தது. மேல் மாடி முழுவதும் சூறையாடப்பட்டு இருந்தது. அனைத்து கட்டில்களும் உடைக்கப்பட்டு இருந்தன. பல வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போயிருந்தன என்றார் அவர்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் அஸாரூதீனின் முன்னாள் மனைவி சங்கீதா என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}