ஓசூரை உலுக்கிய பெண் சிசுக்கொலை.. பிறந்து 14 நாட்களேயான குழந்தையை கொன்ற தந்தை!

Jul 06, 2024,03:10 PM IST

ஓசூர்:   பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை துணியால் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்தவர் மாதையன் என்ற கூழித்தொழிலாளி. இவருக்கு வயது 46. இவரது மனைவி முனியம்மா. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.




இந்நிலையில், சின்னம்மா என்பவரை மாதையன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 14 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானார் சின்னம்மா. அவருக்கு 4வதாக பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தை பிறந்ததில் இருந்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 4வது பெண் குழந்தை என்பதால் இதனை கொன்று விடலாம் என்று மாதையன் கூறியுள்ளார். இதற்கு சின்னம்மாள் சம்மதிக்கவில்லை. 


சின்னம்மாள் மற்றும் மாதையனுக்கும் இடையே தகராறு எற்பட்ட நிலையில், சின்னம்மாளை தகாத வார்த்தைகளில் திட்டி எட்டி உதைத்த மாதையன் பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடியுள்ளார். சின்னம்மாளும் கணவன் மற்றும் குழந்தையை அங்கும் இங்கும் தேடியுள்ளார். இரவு 9 மணி அளவில் மாதையன் குழந்தையை வீட்டின் அருகே போட்டு விட்டு சென்றுள்ளார். குழந்தையை பார்த்த சின்னம்மாள் பதறியடித்துக்கொண்டு குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அங்கு குழந்தை முன்னரே இறந்து விட்டது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.


இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மாதையா மீது சின்னம்மாள் புகார் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மாதையாவை தேடி கண்டுபிடித்து விசாரித்ததில், குழந்தையை கொன்றது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர் மாதையாவை கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்