பிறந்தாச்சு பிப்ரவரி.. என்னெல்லாம் ஸ்பேஷல் இருக்கு தெரியுமா இந்த மாதத்தில்!

Feb 02, 2026,03:45 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாவசு வருடம் 20 26 தை மாதம் 18ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி முதல் நாள் தைப்பூசம் &பௌர்ணமி எனும் சிறப்புகளுடன் துவங்கியுள்ளது பிப்ரவரி மாதம். ஆண்டின் இரண்டாவது மாதமும் மாதங்களில் குறுகிய மாதமான பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை அமைந்துள்ள விரத நாட்கள்,பண்டிகைகள், ஆன்மீக நிகழ்வுகள் ஆகியவற்றின் தொகுப்பை பார்க்கலாம்.


பிப்ரவரி 1: ஞாயிறு தைப்பூசம், பௌர்ணமி, வடலூர் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி முருகப்பெருமானை விரதமிருந்து வழிபட்ட நாள். ஸ்ரீகாளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் புஷ் கர உற்சவம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்ப உற்சவம்.




பிப்ரவரி- 2 திங்கள்: தேய்பிறை பிரதமை தேவமாதா பரிசுத்தரான திருநாள்.


பிப்ரவரி- 3 செவ்வாய்: தேய்பிறை துவிதியை திதி.


பிப்ரவரி -4 புதன்: தேய்பிறை திருதியை,அமிர்த யோகம்.


பிப்ரவரி -5 வியாழன்:  தேய்பிறை சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி.


பிப்ரவரி- 6 வெள்ளி: தேய்பிறை பஞ்சமி திதி, வராகி அம்மன் வழிபட உகந்த நாள். சுப முகூர்த்தம்.


பிப்ரவரி- 7 சனி: தேய்பிறை சஷ்டி. சஷ்டி விரதம் இருப்பது விசேஷம்.


பிப்ரவரி -8 ஞாயிறு:  தேய்பிறை சப்தமி சுபமுகூர்த்த நாள். திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்.


பிப்ரவரி- 9 திங்கள்: தேய்பிறை அஷ்டமி. காலபைரவர் வழிபாடு செய்ய உகந்த நாள்.


பிப்ரவரி- 10 செவ்வாய்: தேய்பிறை நவமி. ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடக்கம்.14 நாட்கள் நடைபெறும்.


பிப்ரவரி -11 புதன் :  காலை 11:16 வரை நவமி திதி பின்பு தசமி.


பிப்ரவரி- 12 வியாழன்: தேய்பிறை தசமி திதி. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.


பிப்ரவரி -13 வெள்ளி :  தேய்பிறை ஏகாதசி. சுப முகூர்த்த நாள்.


பிப்ரவரி -14 சனி : தேய்பிறை துவாதசி.  சனி பிரதோஷம்.


பிப்ரவரி- 15 ஞாயிறு: தேய்பிறை திரயோதசி திதி. சுப முகூர்த்த நாள். ஸ்ரீ மகா சிவராத்திரி.


பிப்ரவரி -16 திங்கள்: தேய்பிறை சதுர்த்தசி அமாவாசை மாலை ஆரம்பம். திருவோண விரதம். சுப முகூர்த்த நாள்.


பிப்ரவரி -17 செவ்வாய் : சர்வ அமாவாசை.


பிப்ரவரி -18 புதன்: வளர்பிறை பிரதமை. அமிர்த யோகம்.சந்திர தரிசனம்.


பிப்ரவரி- 19 வியாழன்: வளர்பிறை துவிதியை திதி. ரமலான் நோன்பு ஆரம்பம்.


பிப்ரவரி- 20 வெள்ளி: வளர்பிறை திரிதியை திதி. சுபமுகூர்த்த நாள்.


பிப்ரவரி -21 சனி: வளர்பிறை சதுர்த்தி. சதுர்த்தி விரதம்,விநாயகர் வழிபாடு செய்ய உகந்த நாள்.


பிப்ரவரி -22 ஞாயிறு: வளர்பிறை பஞ்சமி, வளர்பிறை சஷ்டி.  முருகன் வழிபாடு செய்ய உகந்த நாள்.

 

பிப்ரவரி- 23 திங்கள்: வளர்பிறை கிருத்திகை விரதம்.


பிப்ரவரி -24 செவ்வாய் : வளர்பிறை அஷ்டமி திதி இன்று காலை 7 :50 முதல் நாளை அதிகாலை 4: 10 வரை.


பிப்ரவரி- 25 புதன்: வளர்பிறை நவமி திதி இன்று அதிகாலை 4:11 முதல் நாளை அதிகாலை 3:0 6 வரை.


பிப்ரவரி- 26 வியாழன்: வளர்பிறை தசமி திதி.


பிப்ரவரி -27 வெள்ளி: வளர்பிறை ஏகாதசி.


பிப்ரவரி -28 சனி: வளர்பிறை துவாதசி திதி.


மேலும் இதுபோன்ற சுவாரசியமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

World Daughters Day: இரவில் நீலாம்பரியாய் தாயாகி தாலாட்டுபவள் அவள்!!

news

சர்வதேச மகள்கள் தினம்.. மகாலட்சுமியின் ரூபமே பெண் குழந்தைகள்!

news

மகள் இல்லாக் குறையைப் போக்க வந்த மருமகள்!

news

தென்தமிழ் தலையங்கம்: சுற்றுலா.. மனிதத்தையும் தேசத்தையும் இணைக்கும் பாலம்!

news

மகாளயபட்சம்.. முன்னோர்களுக்குத் தர்ப்பணம், அன்னதானம் செய்வது சிறப்பு!

news

முதல்வர் ரிவ்யூ கூட்டம் நடத்தவில்லை; Reels தான் எடுத்துள்ளார்! - மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: சாந்தி மற்றும் கணவருக்கு ஜாமீன் வழங்க காவல்துறை எதிர்ப்பு

news

மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்து கொண்ட விழாவில் மின்தடை

news

தென்தமிழ்த் தலையங்கம்: உலகம் இதற்கு முன்பு எதைப் பார்த்தெல்லாம் பயந்திருக்கிறது?

அதிகம் பார்க்கும் செய்திகள்