விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதிகளில் புயல் பாதிப்புகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி இறைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை புரட்டி எடுத்தது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் 51 சென்டிமீட்டர் பெருமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி ஆறு போல் ஓடியது.மறுபக்கம் அங்குள்ள ஏரி உடைந்ததால் அளவுக்கு அதிகமான உபரி நீர் வெளியாகி திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடானது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்ததால் பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு அங்குள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். அதே நேரத்தில் வராக நதியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அபாய அளவை தாண்டி தண்ணீர் சென்றதால் அப்பகுதி வழியாக செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வந்து வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள்களுக்கு பல்வேறு நிவாரண பொருட்களையும் வழங்கினார். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு பகுதிகளில் ஃபெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய அமைச்சர் பொன்முடி சென்றார். இவருடன் அமைச்சர் மகன் சிகாமணி, மாவட்ட கலெக்டர் பழனி, ஆகியோரும் உடன் இருந்தனர்.
அப்போது விழுப்புரம் மாவட்டத்திலுள்ள இருவேல்பட்டுப் பகுதி மக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் உடனே நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென போராட்டம் செய்தனர். அமைச்சர் பொன்முடி கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது சேற்றை வாரி இறைத்து தங்களின் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பு நிலவியது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மும்பை மாநகராட்சி வாக்காளர் பட்டியலில் திடுக்.. 11 லட்சம் இரட்டை வாக்காளர்கள் கண்டுபிடிப்பு!
பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா காலமானார்.. மும்பையில் உயிர் பிரிந்தது
INS Mahe.. இந்தியாவின் சைலென்ட் ஹண்டர் மும்பையில் களமிறங்கியது!
நவ., 29ம் தேதி சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் தகவல்!
அதிர வைத்த தேஜஸ் போர் விமான விபத்து.. நடந்த தவறு என்ன.. தீவிரமாக ஆராயும் நிபுணர்கள்
சென்னையில்.. தக்காளி விக்கிற விலைக்கு.. சட்னி அரைக்க முடியாது போலயே.. கிலோ ரூ. 80!
ரஜினிகாந்த்தை திருப்திப்படுத்தப் போவது யார்.. தலைவர் 173 எதிர்காலம் என்னாகும்?
திருவண்ணாமலை தீபத் திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது
SIR விழிப்புணர்வு.. ஆவின் நிறுவனத்தின் சூப்பர் ஐடியா.. பால் பாக்கெட்டில் அபாரம்!
{{comments.comment}}