சென்னை: பகாசுரன், திரெளபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜியை போலீசார் கைது செய்தனர். பழனி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலக்கப்பட்டதாக யூடியூப் சேனலுக்கு பேட்டியளிந்திருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி. இவரது திரைப்படங்களில் கூறிய கருத்துக்கள் பல்வேறு விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் மோகன் ஜி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. அந்த பேட்டியில், "நமக்குத் தெரிந்த கோவில் ஒன்றில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலந்து பக்தர்களுக்கு வழங்கப்படுவதாகத் செவி வழியாக வந்த செய்தியாக கேள்விப்பட்டேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்தைத் தொடர்ந்து திருச்சியில் மோகன் ஜி மீது போலீஸில் புகார் தரப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், இயக்குனர் மோகன் ஜியை சென்னை காசிமேடு இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
இந்தக் கைதை பாஜக கண்டித்துள்ளது. பாஜக மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சினிமா இயக்குனர் மோகன் ஜி சற்று முன் தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை.
திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர் கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கலாச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இது மாதிரியான ஒழுங்கு முறைகளை மட்டும் சரியாக செய்கிறது " எனக் குறிப்பிட்டு இருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}