ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கம்.. ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்.. புதிய வரிகள் செப்.,22 முதல் அமல்

Sep 03, 2025,11:13 PM IST

புது டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது. 2025 செப்டம்பர் 22 முதல் புதிய வரி விகிதங்கள் அமலுக்கு வருகின்றன. இரண்டு அடுக்கு வரி அமைப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 5 மற்றும் 18 சதவீதம் என வரி இருக்கும். சிறு கார், பைக் உட்பட பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் சாதாரண மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் இருக்கும் என்று நம்பப்படுகிறது.


நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து செய்தியாளர்களிடம் விவரித்துக் கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் பேசுகையில், "நாங்கள் வரி அடுக்குகளை குறைத்துள்ளோம். இனி இரண்டு அடுக்குகள் மட்டுமே இருக்கும். இழப்பீட்டு வரியையும் சரி செய்ய உள்ளோம்" என்று அவர் கூறினார். மேலும், "சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அதிகம் உள்ள தொழில்களுக்கு ஆதரவு கிடைக்கும். விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளும் பயன் பெறும். பொருளாதாரத்தின் முக்கிய காரணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்" என்றார்.


சிறு கார்கள் மற்றும் 350 cc-க்கு குறைவான பைக்குகளுக்கான ஜிஎஸ்டி 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. பஸ், லாரி, ஆம்புலன்ஸ் வரிக்கான ஜிஎஸ்டி 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன உதிரி பாகங்களுக்கும் 18% வரி விதிக்கப்படும். மூன்று சக்கர வாகனங்களுக்கான வரி 28% இருந்து 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது.




மனிதனால் உருவாக்கப்பட்ட ஜவுளி துறையில் இருந்த நீண்ட கால சிக்கல் சரி செய்யப்படுகிறது. செயற்கை இழைகளுக்கான ஜிஎஸ்டி 18% இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. செயற்கை நூலுக்கான வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. உரத்துறையில் உள்ள சிக்கலும் சரி செய்யப்படுகிறது. சல்பியூரிக் அமிலம், நைட்ரிக் அமிலம் மற்றும் அம்மோனியாவுக்கான ஜிஎஸ்டி 18% இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்கள் மீதான வரி 12% இருந்து 5% ஆக குறைக்கப்படுகிறது. உதாரணமாக, உயிரி எரிவாயு ஆலைகள், காற்றாலைகள், சூரியசக்தி சமையல் கருவிகள், சூரிய நீர் சூடேற்றிகள் போன்றவற்றுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.


ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம்  இன்று ஏறக்குறைய 10 மணி நேரம் நடைபெற்றது. இதில் மத்திய அரசும், மாநில அரசுகளும் முக்கிய வரி திட்டங்கள் குறித்து விவாதித்தனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, சிறு குறு தொழில் செய்பவர்கள் மற்றும் சாமானிய மக்கள் பயன்பெறும் வகையில் இந்த வரி மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


புதிய ஜிஎஸ்டி மாற்றத்தால் விலை குறையும் பொருட்கள்


- உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது.

- மருத்துவ உபகரணங்களுக்கு 5% வரி

- ஏசி, டிவி, கார் உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி 28 % லிருந்து 18 % ஆகிறது.

- டிராக்டர், விவசாய உபகரணங்களுக்கு 5% ஆக ஜிஎஸ்டி குறைப்பு.

- UHT பால், ரொட்டி, சப்பாத்திக்கு ஜிஎஸ்டி கிடையாது. 

- சோப், ஷாம்பூ, டூத் பேஸ்ட்டிற்கு 5% வரி

- 350 cc இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்கள், தனியார் பயன்படுத்தும் விமானங்களுக்கு 40 % வரி

- அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கும் 15% வரி

- ஆட்டோ வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 28% லிருந்து 18% ஆக குறைப்பு

- நொறுக்கு தீனி, வெண்ணெய்க்கு 12 % வரி

- பான் மசாலா, சிகரெட், குட்கா, ஜர்தா, கார்பனேட்டட் குளிர்பானங்கள், சோடாவிற்கு 40% வரி


புதிய ஜிஎஸ்டி வரிகள் செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வருகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

GST reforms: புதிய ஜிஎஸ்டி.,யால் எவை எவை விலை குறையும்.. எது உயரும்.. பொருட்களின் முழு விபரம் !

news

ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கம்.. ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்.. புதிய வரிகள் செப்.,22 முதல் அமல்

news

படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்

news

வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு

news

அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்

news

மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை.. மழைநீரும் வடிந்த பாடில்லை.. எடப்பாடி பழனிச்சாமி

news

உட்கட்சி பூசல்களை சரி செய்க...தமிழக பாஜக தலைவர்களுக்கு அமித்ஷா எச்சரிக்கை

news

விராட் கோலிக்கு லண்டனில் உடல் தகுதி தேர்வு நடத்த அனுமதி

news

பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்