கைத்தறி புடவையில்.. சூப்பர் மெசேஜுடன் வந்து பட்ஜெட்டை சமர்ப்பித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Jul 23, 2024,11:51 AM IST

டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது பட்ஜெட் இன்று தாக்கல் செய்த நிலையில் அவர் அணிந்திருந்த புடவை சூப்பரான மெசேஜை மறைமுகாக சொல்லியுள்ளது.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி  வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதனால்  நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக  பொறுப்பேற்ற பின் வரும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவே.


நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நேற்று தொடங்கிய இந்த கூட்டத்  தொடரில் பொருளாதாரம் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை ஏழாவது முறையாக  தாக்கல் செய்தார். 


வழக்கம் போல சிம்பிளான புடவையில் வந்திருந்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். மேலும், தங்க நிறத்தில்  தேசிய சின்னம் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற துணியால் மூடப்பட்ட பாரம்பரிய பாஹி காட்டவுடன் அவர் நாடாளுமன்றத்திற்கு வந்தார்.  2024 ஆம் தேதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது, இன்று வெள்ளை நிறம் மற்றும் நீல நிற பார்டருடன் கூடிய கைத்தறி சேலையை அணிந்து வந்திருந்தார்.  இந்த வெள்ளை நிற புடவை அமைதி, வளர்ச்சி, ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் இருந்தது.




2023 ஆம் ஆண்டு யூனியன் பட்ஜெட் தாக்கலின் போது சிவப்பு நிறத்துடன் கருப்பு நிற கோவில் கோபுரம் போன்ற பார்டர் கொண்ட கசுதி நூல் வேலைப்பாடுகளுடன் கொண்ட புடவையை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தார்.




2022 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது பழுப்பு நிற பிரவுன் கலரில் கைத்தறி சேலையை அணிந்திருந்தார். அந்த சேலை சிவப்பு மற்றும் பழுப்பு நிற பிரவுன் கலர் காம்பினேஷனில் இருந்தது.




2021 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் ஆந்திர மாநிலத்தில் பெயர் போன போச்சம்பள்ளி புடவையான சிவப்பு மற்றும் வெள்ளை நிற காம்பினேஷனில், பல்லு பச்சை நிற பார்டரில் இருக்கும் அழகிய சேலையை அணிந்திருந்தார்.




2020 ஆம் ஆண்டு மங்களகரமான மாம்பழ நிறத்தில் ஜொலிக்கும் மஞ்சள் நிற புடவையை அணிந்திருந்தார். மஞ்சள் நிறம் மங்களகரமாக இருக்கும் என்பதை இது உணர்த்துவதாக அமைந்திருந்தது.




2019 ஆம் ஆண்டு பட்ஜெட் தாக்கலின் போது நிர்மலா சீதாராமன் கோல்டன் பார்டர் இல் சிவப்பு மற்றும் பிங்க் காம்பினேஷன் மங்கலகிரி புடவையை அணிந்திருந்தார். இதுவும் ஆந்திர மாநிலத்தில் பிரபலமான சேலை வகை ஆகும. இது இவருக்கு முதல் பட்ஜெட் தாக்கல் ஆகும்.


நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்பட்ட ஏழு பட்ஜெட்டிலும் அணிந்து வந்த புடவைகள், இவரின் எளிமையும் பாரம்பரியமான கைத்தறி ஆடையின் மகத்துவத்தையும் பிரதிபலிக்கிறது.

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்