டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று இடைக்கால பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
இது தேர்தல் ஆண்டு. தற்போதைய மத்திய அரசு தாக்கல் செய்யப் போகும் கடைசி பட்ஜெட் இது. அந்த வகையில் பல்வேறு சர்ப்ரைஸ்களும், சலுகைகளும், அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கும் என்று பலரும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
இடைக்கால பட்ஜெட் என்பதால் பெரிய அளவிலான வரி விதிப்பு உள்ளிட்டவை இடம் பெற வாய்ப்பில்லை. லோக்சபா தேர்தல் முடிந்து, புதிய அரசு பதவியேற்கும் காலம் வரை மட்டுமே இந்த பட்ஜெட்டானது செல்லும் என்பதால் அதற்கேற்ற வகையிலேயே பட்ஜெட் இருக்கும்.
மாதாந்திர ஊதியதாரர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில் பிரதமர் மோடி ஆர்வம் காட்டி வருகிறார். எனவே பெண்களுக்கான திட்டங்கள் குறித்த அறிவிப்பும் இன்றைய பட்ஜெட்டில் இடம் பெறக் கூடும் என்று தெரிகிறது.
3வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பாஜக அரசு பல்வேறு முஸ்தீபுகளுடன் செயல்பட்டு வருகிறது. எனவே அதை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக ஒரு பேச்சு உள்ளது.
நாடாளுமன்றம் தற்போது புதிய கட்டடத்தில் இயங்கி வருகிறது. அந்த புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள முதல் பட்ஜெட் இதுதான். புதிய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையும் நிர்மலா சீதாராமனுக்குக் கிடைத்துள்ளது. முதல் பட்ஜெட்டை புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அரசு, கட்சி என்ற பெயர் பாஜகவுக்குக் கிடைக்கவுள்ளது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}