சென்னை: மின்னணு பாதுகாப்பு, செல்போன் உபகரணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 14 புதிய முதலீடுகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் அமைச்சரவையில் நடைபெற்ற மாற்றத்திற்கு பின்னர் நடக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர்உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது:
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ரூபாய் 9000 கோடி முதலீட்டில் வேலை வாய்ப்பை வழங்க உள்ளது. மின்னணு துறை சார்ந்த பிரின்டட் சர்க்யூட் போர்டுகள், குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் போன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருள்கள், பாதுகாப்பு துறைக்கான உபகரணங்கள், மருத்துவத்துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதரப் பொருட்கள், மருந்து பொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா உற்பத்தி, மின்வாகனங்கள் மற்றும் தொலை தொடர்பு நெட்வொர்க்கள் குறித்த ஆராய்ச்சி மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளில் இந்த முதலீடுகள் அமைந்துள்ளன.
குறிப்பாக, தூத்துக்குடி, ராமநாதபுரம் திருவண்ணாமலை மாவட்டங்களில் ரூபாய் 10,325 கோடி முதலீட்டின் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளன. அமைச்சரவை கூட்டத்தில் இந்த முதலீடுகளுக்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் சுமார் 46 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இன்றைய அமைச்சரவையில், ரூபாய் 38,698.80 கோடி முதலீட்டுக்கான 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா மோட்டார்ஸ் லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஃபாக்ஸ்கான் குடும்பத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி,ராமநாதபுரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பி எஸ் ஜி குழுமத்தின் துணை நிறுவன லீப் கிரீன் எனர்ஜி டிரெயின் பிரைவேட் லிமிடெட், அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவையாகும் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}