மதுரை லேடீஸ் ஹாஸ்டலில் விபரீதம்.. ஃபிரிட்ஜ் வெடித்து.. 2 பெண்கள் பலி.. ஹாஸ்டல் உரிமையாளர் கைது

Sep 12, 2024,05:11 PM IST

மதுரை: மதுரை, கட்ராப்பாளையம் பகுதியில் உள்ள விசாகா என்ற தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் ஃபிரிட்ஜில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக அது வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்ராபாளையம்  பகுதியில் விசாகா என்ற மகளிர் தங்கும் விடுதி உள்ளது. மிகவும் பழமையான கட்டடத்தில் இது இயங்கி வந்துள்ளது. இந்தக் கட்டடம் பலவீனமாக இருப்பதால் இதைக் காலி செய்ய வேண்டும் என்று கடந்த வருடமே மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் விடுதி உரிமையாளர் அதைக் கண்டு கொள்ளாமல் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு உள்ளது.


இந்த நிலையில், இன்று அதிகாலையில் விடுதியில் உள்ள ரெப்ரிஜிரிரேட்டரில் மின்கசிவு காரணமாக வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. விடுதியில் 50க்கும் மேற்பட்டோர் அப்போது இருந்துள்ளனர். அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் அசந்து தூங்கியிருந்துள்ளனர். இதனால் தீவிபத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.  இதையடுத்து அனைவரும் வெளியே ஓடி வந்துள்ளனர். 




பெரியார் பேருந்து நிலையம் அருகில் தான் தீயணைப்பு நிலையம் இருப்பதால் உடனடியாக தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெண்கள் தங்கும் விடுதி குறுகிய சாலையில் இருப்பதால் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கல் நீடித்தது. இருப்பினும் தீ விபத்தில் சிக்கி பரிமளா சௌத்ரி மற்றும் சரண்யா ஆகிய இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்‌. மேலும் மூன்று பெண்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


இதனை அறிந்து மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். அப்போது இந்த விடுதியின் உரிமையாளர் யார்..? இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது..? என்பது தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடத்தினர்.


உரிமையாளர் கைது  - கலெக்டர் சங்கீதா எச்சரிக்கை




இந்தக் கட்டத்தின் உரிமையாளர் தினகரன். பழைய கட்டடம் என்பதால் விடுதியைக் காலி செய்யுமாறு அதன் உரிமையாளர் இன்பா ஜெகதீசனை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் இன்பா ஜெகதீசன் காலி செய்யாமல் இருந்துள்ளார். இதுதொடர்பாகத்தான் கோர்ட்டில் வழக்கும் உள்ளது. மோசமான நிலையில் இருந்த கட்டடத்தில் தொடர்ந்து விடுதியை நடத்தி வந்ததால், இந்த சம்பவத்திற்குக் காரணமானவராக அவரை குற்றம் சாட்டியுள்ள போலீஸார் தற்போது இன்பா ஜெகதீசனைக் கைது செய்துள்ளனர்.


இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சம்பவத்தில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் அனைத்து விடுதிகளையும் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளோம். யாராவது அனுமதி இல்லாமல் விடுதி நடத்தினால் அந்த விடுதிகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.


ஃபிரிட்ஜ் வெடித்து இரண்டு பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்