மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் ஜனவரி 18,19 (இன்று மற்றும் நாளை) ஆகிய 2 நாட்களும் சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரையில் முதன்முறையாக சர்வதேச பலூன் திருவிழா நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழா சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் சென்னை மற்றும் பொள்ளாச்சியில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு முதன்முறையாக மதுரையிலும் நடத்தப்பட உள்ளது.

இந்த விழாவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பிரேசில், பெல்ஜியம், தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஏர் பலூன் பைலட்டுகள் பங்கேற்க உள்ளனர். இந்த விழாவில் குழந்தைகளை கவரும் விதத்தில் பல்வேறு வடிவிலான பலூன்கள் பறக்க உள்ளன. பொள்ளாச்சி மற்றும் சென்னையில் பறக்க விடப்பட்டது போன்ற யானை, தவளை உள்ளிட்ட வடிவிலான பலூன்கள் பறக்க விடப்பட உள்ளன.
இந்த பலூன் திருவிழா, மதுரை மாவட்டம், ஜல்லிக்கட்டு நடைபெறும், அலங்காநல்லூரில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல உணவு வகைகளுடன் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இந்த பலூன் திருவிழா மதுரை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்பத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமித்ஷா தமிழகம் வந்தது இதுக்கு தானா.. நயினார் சொன்னதை யாராவது கவனிச்சீங்களா?
திமுக அரசு மீது ஊழல் புகார்: கவர்னரிடம் மனு அளித்த எடப்பாடி பழனிச்சாமி
ஜனவரி 6... தமிழகத்தில், 'வேட்டி நாள்' கொண்டாடுவது ஏன் தெரியுமா?
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கோரி அவசர வழக்கு
"Nature's Resplendence: An Ode to the Sublime"
நெஞ்சமெல்லாம் நீயே (சிறுகதை)
கண்ணாடியில்.. தூசி நிறைய இருக்கா.. அதை இப்படித் தொடச்சா.. எப்படி மாறும் தெரியுமா!
அதிரடியாக உயர்ந்து வரும் தங்கம் தங்கம் வெள்ளி விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!
ஜனநாயகன், பாரசக்தி.. இரண்டும் வெல்வதே தமிழ் சினிமாவுக்கு நல்லது!
{{comments.comment}}