புதிய தோற்றத்தில் நடிகர் விக்னேஷ்.. ரெட் பிளவர் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.. வெளியிட்டார் விஜய் சேதுபதி..!

Jul 19, 2024,03:08 PM IST

சென்னை:   மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான ரெட் பிளவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.


கே.காளிகாம்பாள் பிச்சர்ஸ் சார்பில் கே. மாணிக்கம் தயாரிக்கும் ரெட் ஃப்ளவர் படத்தை ஆன்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்குகிறார். இப்படத்திற்கு கே.தேவசூர்யா ஒளிப்பதிவு செய்ய , சந்தோஷ் ராம் இசை அமைத்துள்ளார்.




மிக பிரம்மாண்ட பொருட் செலவில்,ஆக்சன் திரில்லர் கலந்த  இப்படத்தில் நாயகனாக நடிகர் விக்னேஷ் நடிக்கிறார். மனிஷா ஜாஷ்னானி நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நாசர், ஒய் ஜி மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சங், டி எம் கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய் ,மோகன்ராம், ஜே. பி மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


இந்த நிலையில் ரெட் பிளவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். நடிகர் விக்னேஷ் நடித்த ரொமான்டிக் பர்ஸ்ட் லுக் போஸ்டர்  தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரை மீண்டும் திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த போஸ்டர் ஏற்படுத்தியுள்ளதாம்.

 


மேலும் ஆன்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியுள்ள இப்படம் காதலுக்கு விருந்தாக இருக்கும் என்பதை உறுதி அளிக்கிறது. காதலால் அழியாத காதலை சமகால கூறுகளுடன் கலந்து கதைக்களத்துடன் வடிவமைத்துள்ளார் இயக்குனர். இப்படம் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறோம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இப்படம் குறித்து இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் கூறுகையில், ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் கே மாணிக்கம் தயாரிக்கும் ரெட் பிளவர் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள ஆக்சன் திரில்லர் திரைப்படம். இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயங்களைப் பற்றி இப்படம் பேசும் என கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு

news

நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!

news

சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?

news

எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!

news

TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?

news

லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!

news

Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி

news

எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!

news

முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!

அதிகம் பார்க்கும் செய்திகள்