டெல்லி: 2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று. பங்குனி உத்திரம் மற்றும் ஹோலி பண்டிகையில் வருவதால் இது அபூர்வமான சந்திரகிரகணமாக பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம் ஏற்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான முதல் சந்திர கிரகணம் இது. 100 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்படும் சந்திரகிரகணம் இன்று. 2024ம் வருடத்தில் முதல் கிரகணம். சந்திர கிரகணம் என்பது ஒரு சிறப்பான அரிதாக வானில் ஏற்படும் நிகழ்வாகும். சந்திரனுக்கும் இடையில் பூமி வரும் நிலையில் சூரியனின் நேரடி கதிர்கள் சந்திரனை ஒளிர விடாமல் தடுக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இந்திய நேரப்படி காலை 10.23 மணிக்கு துவங்கி மாலை 3.02 வரை இந்த கிரகணம் இருக்குமாம். இந்தியாவில் இதனை பார்க்க முடியாது. அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா, அயர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, பெல்ஜியம், தெற்கு நார்வே மற்றும் சுவிட்சர்லாந்தின் சில பகுதிகளில் மட்டும் இதனை காண முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பங்குனி உத்திரம், ஹோலி பண்டிகையில் அன்று இந்த கிரகணம் வருகிறது. இது போன்ற கிரகணம் கடந்த 100 வருடங்களுக்கு முன்னர் தான் ஏற்பட்டது என்றும் விஞ்ஞானிகளில் தரப்பில் கூறப்படுகிறது. சூரிய கிரகணத்தை வெறும் கண்களில் பார்க்க கூடாது. அதேசமயம், சந்திர கிரகணத்தை வெறும் கண்களில் பார்க்க முடியுமாம். உயரமான இடங்களில் இருந்தும் மேகமூட்டம் இல்லாத நேரங்களிலும் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று வானில் தோன்றும் சந்திர கிரகணம் வழக்கமான சந்திர கிரகண நிகழ்வை விட சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உயர் திறன் கொண்ட தொலை நோக்கியை வைத்தே இதை பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ரிஷபம், கன்னி, சிம்மம், தனுஷ் ஆகிய ராசியினர் கவனமுடம் இருக்க வேண்டும் என்று ஜோதிட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}