சென்னை: இந்தியாவுக்கு விடுதலை கிடைத்த உடன் முதன்முதலில் ஏற்பட்ட நமது தேசிய கொடி சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நமது நாடு நீண்ட காலம் போராடி ரத்தம் சிந்திய போராட்டங்களுக்குப் பின்னர், 1947ம் ஆண்டு விடுதலை பெற்றது. இந்தியாவை இரண்டாகப் பிரித்து, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி பாகிஸ்தானுக்கும், 15ம் தேதி இந்தியாவுக்கும் சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முடிவு செய்தது.

இந்துக்களோடு முஸ்லிம் சமுதாய மக்கள் சேர்ந்து வாழ்வதற்கு சாத்தியப்படாது, அத்துடன் முஸ்லீம்களுக்கு என்று ஒரு தனி நாடு வேண்டும் என்று மகாத்மா காந்தியுடன் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முகமது அலி ஜின்னா வலியுறுத்தினார். இந்த பிரிவனைக்கு மகாத்மா காந்தி உள்ளிட்ட எந்த தலைவர்களும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனால் பிரித்தாளும் சூழ்ச்சியை தூண்டி விட்ட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், முஸ்லீம்களுக்கம், இந்துக்களுக்கும் இடையே பெரும் பிளவை ஏற்படுத்தி நாட்டையே பிரித்துக் கொடுத்து விட்டனர்.
இந்தியாவின் கிழக்கில் உள்ள வங்கத்தையும், வடக்கில் முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகளையும் சேர்த்து பாகிஸ்தான் என பிரித்தது இங்கிலாந்து ராஜ்ஜியம். பாகிஸ்தானுக்கு பகலிலும், இந்தியாவிற்கு நள்ளிரவிலும் சுதந்திரம் வழங்கப்பட்டது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லியில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் இந்திய நாட்டின் முதல் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்த கொடியினை ஜனஹர்லால் நேரு ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இந்திய கொடி ஏற்றப்பட்டது. அன்றைய நாளினை இந்திய மக்கள் அனைவரும் கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அன்றைய நாளே சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலும் பிரிட்டிஷ் அரசின் கொடி இறக்கப்பட்டு, இந்திய நாட்டின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.

சென்னையில் ஏற்றப்பட்ட தேசிய கொடி கடந்த 2013ம் ஆண்டில் இருந்து இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. 12 அடி நீளம், 8 அடி அகலம் கொண்ட மல்பெரிபட்டு துணியால் தயாரிக்கப்பட்ட இந்த ராட்சத தேசியக் கொடி சென்னையில்உள்ள செயின் ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கண்ணாடி பதித்த மரத்தினால் செய்யப்பட்ட பேழையில் வைக்கப்பட்டுள்ள இந்த பட்டு கொடி கால சூழ்நிலையால் சேதமடையாமல் இருப்பதை தடுக்க அந்த பேழைக்குள் ரசாயனங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த தேசிய கொடி வைக்கப்பட்டுள்ள அறை 24 மணி நேரமும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் தூசி மற்றும் வெளிப்புற வெளிச்சம் பாதிக்காத அளவிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. இந்த தேசிய கொடியை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதும் உண்டு. பார்வையாளர்கள் செல்லும் போது மட்டும் அந்த அறைக்குள் விளக்குகள் எரியும் வகையில் புதிய தொழில் நுட்பம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தகைய சிறப்பு வாய்ந்த தேசிய கொடியினையும் நமது நாட்டினையும் பாதுகாக்கும் கடமை நமது ஒவ்வொரு இந்தியருக்கும் உண்டு.
ஜெய்ஹிந்த் சொல்வோம்.. தேசத்திற்காக உயிர்நீத்த தியாகிகளின் ரத்தத்திற்கு வீர வணக்கம் செலுத்துவோம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!
ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை
பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு
2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!
பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி
தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு
புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
{{comments.comment}}