சென்னை: 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் முடிவடைந்துள்ளது.
நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ளது. முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், தொகுதிகளின் எண்ணிக்கை:
அந்தமான் நிக்கோபார் தீவுகள் - 1
அருணாச்சல் பிரதேசம் - 2
அஸ்ஸாம் - 5
பீகார் - 4
சட்டிஸ்கர் - 1
ஜம்மு காஷ்மீர் - 1
மத்தியப் பிரதேசம் - 6
மகாராஷ்டிரா - 5
மணிப்பூர் - 2
மேகாலயா - 2
மிஸோரம் - 1
நாகாலாந்து - 1
புதுச்சேரி - 1
ராஜஸ்தான் - 12
சிக்கிம் - 1
தமிழ்நாடு - 39
திரிபுரா - 1
உத்தரகாண்ட் - 5
உத்தரப் பிரதேசம் - 8
மேற்கு வங்காளம் - 3
லட்சத்தீவு - 1
வாக்குப்பதிவு நேரம்:
காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கும். மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடிவடையும். கூடுதல் வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்தால், அவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்குகளை பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதிகபட்சம் கூடுதலாக ஒரு மணி நேரம் வரை அவகாசம் அளிக்கப்படும்.
சட்டசபை பொதுத் தேர்தல்:
மக்களவை முதல் கட்ட வாக்குப் பதிவின்போது, அருணாச்சல் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ஒடிஷா மற்றும் சிக்கிம் மாநில சட்டசபைகளுக்கும் பொதுத் தேர்தல் நடைபெறும். அதேபோல தமிழ்நாட்டில் விளவங்கோடு சட்டசபைக்கும் இடைத் தேர்தல் நடைபெறும்.
முதல் கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்:

கனிமொழி, டாக்டர் தமிழிசை செளந்தரராஜன், அண்ணாமலை, தமிழச்சி தங்கப்பாண்டியன், தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, கார்த்தி சிதம்பரம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ராதிகா சரத்குமார், ஆ.ராசா, எல்.முருகன், சு. வெங்கடேசன், பொன் ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த், மாணிக்கம் தாக்கூர், விஜய பிரபாகரன், ஜெகத்ரட்சகன், ஓ.பன்னீர் செல்வம், மத்திய அமைச்சர்கள் நிதின் கத்காரி, கிரண் ரிஜிஜு.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}