டெல்லி: 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் ஜூன் 24ம் தேதி தொடங்குகிறது. அன்றைய தினம் புதிய எம்.பிக்கள் பதவியேற்பு நடைபெறும். தற்காலிக சபாநாயகர் புதிய எம்.பிக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.
இந்தத் தகவலை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
புதிய எம்.பிக்கள் பதவியேற்பு முடிந்ததும், லோக்சபா சபாநாயகர் தேர்தலும் நடைபெறும். புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதும், அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து அவரை அவரது இருக்கையில் அமர வைப்பார்கள். அதன் பின்னர் குடியரசுத் தலைவர் உரை இடம் பெறும். ஜூன் 27ம் தேதி குடியரசுத் தலைவரின் உரை இடம் பெறும். மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்துவார். ஜூலை 3ம் தேதியுடன் கூட்டத் தொடர் நிறைவு பெறும்.

இதேபோல ராஜ்யசபாவின் 264வது கூட்டத் தொடர் ஜூன் 27ம் தேதி தொடங்கி ஜூலை 3ம் தேதி முடிவடையும் என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் நிச்சயம் அனல் பறக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே எக்சிட் போல் சமயத்தில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரும் உயர்வு மற்றும் தேர்தல் நாளில் ஏற்பட்ட சரிவு குறித்து காங்கிரஸ் கட்சி பரபரப்பான புகாரை வைத்துள்ளது. அதேபோல நீட் தேர்வு குறித்தும் நாடாளுமன்றத்தில் பேசுவேன் என்று ராகுல் காந்தி கூறியிருக்கிறார். எனவே எதிர்க்கட்சிகள் தரப்பில் புயலைக் கிளப்பக் காத்துள்ளனர். எனவே மக்களவையின் முதல் கூட்டத் தொடரிலேயே சூறாவளிக்கு வாய்ப்பிருக்கிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}