சென்னை: தமிழ்நாட்டு கடலோரங்களில் அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதையடுத்து கடலுக்குள் செல்ல மீனவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழ்நாட்டு கடல் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக அமலில் இருந்து வந்த மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை 60 நாட்கள் இந்த தடை விதிக்கப்படுவது வழக்கம். இந்த சமயத்தில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் இந்த சமயத்தில் மீன் பிடி தடை விதிக்கப்படுகிறது.
திருவள்ளூர் தொடங்கி ராமாநாதபுரம் மாவட்டம் வரையிலும் இந்த மீன் பிடிதடைக்காலம் அமலில் இருக்கும். கடந்த இரண்டு மாதங்களாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்த மீனவர்கள் மீன்பிடித்தடை காலம் இன்றுடன் முடிவடைவதால் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல உள்ளனனர். படகுகளை பழுது பார்ப்பது, மீன்பிடி வலைகளை சரி செய்வது உள்ளிட்ட பணிகளில் அவர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
நாளை முதல் மீண்டும் ஆழ்கடல் மீன்பிடி தொடங்கும். அதாவது இன்று நள்ளிரவு 12 மணியுடன் தடை முடிவதால் நள்ளிரவுக்கு மேல் கடலுக்குள் செல்ல படகுகள் மற்றும் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன்பிடி தடைக்காலத்தின் காரணமாக அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் உற்சாகத்துடன் கடலுக்குள் செல்ல உள்ளனர். அதே சமயம் இலங்கை கடற்படையானது தங்களுக்கு எந்தவித இடையூறும் செய்யாமல் இருக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}