சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு மாத மீன்பிடி தடைக்காலம் ஆரம்பமாக உள்ளது. ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை இந்த தடைக்காலம் 61 நாட்கள் கடைபிடிக்கப்படும்.
கிழக்கு கடற்கரைப்பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தைக் கருத்தில் கொண்டு மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு 61 நாட்கள் மீன்பிடித்தடைக்காலம் கொண்டு வரப்பட்டு. அமல்படுத்தப்படுகிறது கும். மத்திய அரசு ஆண்டுதோறும் இந்த தடையை விதித்து வருகிறது. மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொரித்து, இனப்பெருக்கம் செய்யும் காலம் ஏப்ரல் மற்றும் மே மாதமாகும்.

இந்த மாதத்தில் விசைப்படகுகள் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடித்தால் மீன்வளம் குறைந்து விடும் என்பதால், மீன்வளத்துறை மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டிற்கான தமிழகத்தின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை அமலுக்கு வருகிறது. இந்த காலங்களில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க செல்லக் கூடாது என்றும், வல்லம், கட்டுமரம், ஃபைபர் படகுகள் உள்ளிட்ட நாட்டுப் படகுகளில் மட்டும் மீனவர்கள் கரையோரப் பகுதியில் மீன்பிடிக்கச் செல்வர். ஆழ்கடலுக்கு செல்ல அனுமதி முற்றிலும் மாறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கால கட்டத்தில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்த தடைக்காலத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உட்பட 14 தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 15,000 விசைப்படகுகள் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி நங்கூரமிடப்பட்டிருக்கும். இந்த தடை காலங்களில் மீன்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் மீன் விலையும் உயர்ந்தே தான் இருக்கும்.
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
நாகப்பட்டினத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்!
சென்னையில் நாளை கூடுகிறது.. அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு.. முக்கிய முடிவு எடுக்கப்படுமா?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
லக்னோவில் நடந்த ஸ்கவுட் நிகழ்ச்சியில்.. ஜொலித்த தமிழ்நாடு மாணவி!
Most Searched Athlete: அதிரடி காட்டிய இந்திய வீரர் அபிஷேக் ஷர்மா.. பாகிஸ்தானில் காட்டிய எழுச்சி
எடப்பாடியார் அதிரடி.. கேஏ செங்கோட்டையனின் அண்ணன் மகனை இழுத்த அதிமுக!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
{{comments.comment}}