புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே கடன் பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை மூலம் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் ரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் இளயங்குடிபட்டி, நமனசமுத்திர சாலை அருகிலேயே ஒரு கார் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை அடுத்து அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் காரை சோதனையிட்டனர்.
அப்போது அந்த காரில் ஒரு குடும்பமே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அம்மா, அப்பா, மகன், மகள், மாமியார் ஆகியோர் என்றும் தெரிய வந்தது. கடன் பிரச்சினை காரணமாக தாங்கள் இந்த முடிவை எடுத்ததாக கடிதம் எழுதி வைத்துள்ளனர். காரில் இருந்த உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சேலத்திலிருந்து காரிலேயே வந்து இங்கு காரை நிறுத்தி விட்டு விஷம் அருந்தி தங்களது வாழ்க்கையை இவர்கள் முடித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தை சார்ந்த ஜந்து பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
இப்படித்தான், கடந்த செப்டம்பர் 16ஆம் தேதி மதுரையில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நினைவிருக்கலாம்.
தற்கொலை தீர்வல்ல
எந்த ஒரு விஷயத்திற்கும் தற்கொலை என்பது தீர்வாகாது. எந்த ஒரு செயலாக இருந்தாலும் நாம் அதனை எப்படி அணுகுகிறோம் என்பது தான் முக்கியம். சமீப காலமாக மக்கள் தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்கும், தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கிலும் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கும் நிலைக்குச் செல்கின்றனர். தேவையில்லாமல் கடன் வாங்குவோர் அதிகமாகி வருகின்றனர்.
எல்லாவற்றுக்கும் கடன் வாங்குவது தவிர்க்கப்பட வேண்டும். கையில் என்ன இருக்கிறதோ அதற்கேற்ப செலவுகளைச் செய்ய முயற்சிக்க வேண்டும். கைக்கு மீறிய செலவுகள் கடன் சுமையை அதிகரிக்கவே செய்யும். அப்படி செய்வதினால் ஒரு கட்டத்தில் என்ன செய்வது என்று அறியாமல் இது போன்ற விபரீத முடிவுகளை எடுத்து வருகின்றனர். நமக்கு என்ன தேவையோ.. நம்மால் என்ன முடியுமோ.. அதற்கு ஏற்றார் போல் ஒரு வாழ்க்கையை வாழ்ந்தால் இது போன்ற சிக்கல்களில் இருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழலாம்.
எந்தப் பிரச்சினை வந்தாலும், எந்த சிக்கலைச் சந்தித்தாலும் மனம் உடைந்து விடாதீர்கள், பயப்படாதீர்கள்.. அதற்கு என்ன தீர்வோ அதைச் சிந்தியுங்கள், தேவையான ஆலோசனைகளைத் தர பல்வேறு உபாயங்கள் உள்ளன. அவற்றை நாடுங்கள். தற்கொலை என்ற எண்ணத்திற்கு மட்டும் போகாதீர்கள்.. அது தீர்வு அல்ல.
தற்கொலை எண்ணம் வந்தால் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு இலவச ஆலோசனை பெறுங்கள்: +91 44 2464 0050, +91 44 2464 0060
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}