செங்கல்பட்டு: மாமல்லபுரம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் கார் மோதி, சாலையோரம் மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த ஓ.எம்.ஆர் சாலையில் பண்டித மேடு பகுதியை சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்து விட்டு சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது திருப்போரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி தாறுமாறாக வந்த கார், சாலையோரமாக மாடு மேய்த்து விட்டு அமர்ந்திருந்த 5 பெண்கள் மீது மோதியது. இந்த சம்பவத்தில் வரிசையாக அமர்ந்திருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார் விபத்து எவ்வாறு நடந்தது என்று விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் கார் மோதி பலியானது, கெளரி, ஆனந்தி, விஜயா, லோகம்மாள், யசோதா என்பது தெரிய வந்தது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளனர். சம்பவத்தை அடுத்து விபத்தில் இறந்த பெண்களின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கார் ஓட்டி வந்த இளைஞரை அப்பகுதி மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீஸார் அவர்களிடமிருந்து அந்த நபரை மீட்டு கைது செய்து அங்கிருந்து கூட்டிச் சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Weather Update: தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும்: வானிலை மையம் தகவல்!
இஸ்ரேலுக்கு கருணை காட்ட மாட்டோம்.. போர் தொடங்கி விட்டது.. ஈரான் மதத் தலைவர் கமேனி ஆவேசம்!
கீழடி அகழாய்வை நிராகரித்தால் .... முதல் குரலாக அதிமுகவின் குரல் ஒலிக்கும்: ஆர்.பி.உதயகுமார்
வாசக் கருவேப்பிலையே.. எடுத்து எரியாதீங்க.. அப்படியே சாப்பிடுங்க.. ரொம்ப நல்லது!
தொழில்துறை வளரவில்லை.. அமைச்சர் பிடிஆர் பேச்சுக்கு முதல்வரின் பதில் என்ன.. அன்புமணி கேள்வி!
SMART WATER ATM: சென்னையில் கட்டணமில்லா குடிநீர் சேவையை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
3ம் நாட்டின் மத்தியஸ்தத்தை எப்போதும் இந்தியா ஏற்காது.. டிரம்ப்பிடம் கூறிய பிரதமர் மோடி
ரயில்வேயில் 6180 டெக்னீஷியன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
காலையிலேயே வருமான வரித்துறை அதிரடி.. சீஷெல் ஹோட்டல்களில் ரெய்டு.. சிக்கியது என்ன?
{{comments.comment}}