சென்னை: 2023ம் ஆண்டு அதிக அளவில் அன்இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலியாக இன்ஸ்டாகிராம் உருவெடுத்துள்ளது. ஏன் இப்படி ஒரு இன்ஸ்டாகிராமுக்கு என்று தெரியில்லை.
இது ஸ்மார்ட் போன் யுகம்.. எதை எடுத்தாலும் போனை எடுத்து நோண்டித்தான் பலரும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.. கற்றுத் தருகிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்வதாக இருந்தால் இது "ஆப்" யுகம். எல்லாத்துக்கும் ஆப் வந்தாச்சு.. ஆப் இல்லாத விஷயமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு ஆப்கள் நிறைந்து கிடக்கின்றன.
ஆப்கள் வருவதும், அதை டவுன்லோட் செய்வதும், தேவையில்லாவிட்டால் அன்இன்ஸ்டால் செய்வதும் சகஜமாகி விட்டது. அந்த வகையில் 2023ம் ஆண்டு அதிக அளவில் அன்இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப்கள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் வெளியான தகவல் அதிர வைப்பதாக உள்ளது.
மக்களிடையே, குறிப்பாக இளசுகளிடையே ரொம்பப் பாப்புலராக உள்ள இன்ஸ்டாகிராமைத்தான் அதிகம் பேர் இந்த ஆண்டு அன்இன்ஸ்டால் செய்துள்ளனராம். இதுதொடர்பாக டிஆர்ஜி டேட்டா சென்டர் அமைப்பு நடத்திய ஆய்வில் இதுகுறித்துத் தெரிய வந்துள்ளதாவது:
உலக அளவில் கிட்டத்தட்ட 4.8 பில்லியன் கோடி சோசியல் மீடியா பயன்பாட்டாளர்கள் உள்ளனராம். இது உலக மக்கள் தொகையில் 59.9 சதவீதமாகும். இணையதள பயன்பாட்டாளர்களில் இது 92.7 சதவீதமாகும். இவர்கள் ஒரு மாதத்திற்கு சராசரியாக 6.7 நெட் வொர்க்குகளைப் பயன்படுத்துகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக 2 மணி நேரம் 24 நிமிடங்களை அதில் செலவிடுகின்றனர்.
சமூக வலைதள பிளாட்பாரங்களிலேயே அதிக அளவில் இந்த ஆண்டு அதிகம் அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட ஆப் என்றால் அது இன்ஸ்டாகிராம்தான். சராசரியாக ஒவ்வொரு மாதமும்ம கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் how to delete my Instagram account என்று சர்ச் செய்து பார்த்துள்ளனர். அதாவது 1 லட்சம் பேருக்கு 12,500 பேர் இப்படி சர்ச் செய்து பார்த்துள்ளனர்.
அதேசமயம், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2.4 பில்லியன் ஆக்டிவ் பயன்பாட்டாளர்கள் இன்ஸ்டாகிராமுக்கு உள்ளனர். ஆனால் பலரும் இதை அன்இன்ஸ்டால் செய்து வருவதாலும், அதுகுறித்து தேடுவதாலும் இந்த ஆப் விரைவில் செல்வாக்கை இழக்கலாம் என்ற அச்சமும் உள்ளது.
இதற்கு அடுத்து ஸ்னாப்சாட் உள்ளது. இது 2011ம் ஆண்டு அறிமுகமானஇது. இதை டெலிட் செய்வது எப்படி என்று மாதந்தோறும் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேடியுள்ளனராம். இது இன்ஸ்டாகிராமை விட குறைவான தேடல்தான் என்றாலும் கூட, ஆபத்தானதுதான்.
நேபாளத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு: 14 பேர் பலி
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
தாய்!!!
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
{{comments.comment}}