சென்னை: தென் சென்னை பாஜக வேட்பாளர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பிரச்சாரம் செய்து வந்த போது, ஜேசிபியால் பூ மழை பொழிந்து வரவேற்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஆறு நாட்களே உள்ள நிலையில், பாஜக வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை எதிர்த்து போட்டியிடுகிறார். இதனால் இந்தப் பகுதிகளில் டப் காம்பெடிஷன் நடைபெறுகிறது. ஏனெனில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்கனவே ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்தார். இதற்காக தீவிர பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தென் சென்னை தொகுதியில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என தீவிர போட்டி நடைபெற்று வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா எல்லோரும் அறிந்ததே. அந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனின் திரு வீதி உலா நேற்று முதல் தொடங்கப்பட்டது . அப்போது ஒவ்வொரு நாளும் சொக்கரும் மீனாட்சியம்மனும் திருவீதி உலா வரும்போது மேல மாசி வீதி பகுதிகளில் வானத்து தூதர்கள் போல ஒரு பொம்மையை ஏற்பாடு செய்து, அம்மையும் அப்பனும் மீது பூக்களை கொட்டி மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு நடத்துவது வழக்கம்.

அதுபோல டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் தீவிர பிரச்சாரம் செய்ய வாகன பேரணி மேற்கொள்ளும் போது ஜே சி பி யில் நிறைய மலர்களை நிரப்பி தமிழிசை சௌந்தர்ராஜன் தலை மீது பூமழை பொழிந்தது. அந்த நொடியில் தமிழிசை சௌந்தர்ராஜன் அருகில் ஜேசிபி வரவும் பதறிப் போனார். அது மட்டுமல்லாமல் பொக்லைன் மூலம் ராட்சத மாலையும் அணிவிக்கப்பட்டது. இதனை பாஜக தொண்டர்கள் அனைவரும் வரவேற்று மகிழ்ச்சியில் கைகளை தட்டினர். பின்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் மகிழ்ச்சியில் பூக்களை அள்ளி தொண்டர்கள் மீது தூவி வாக்கு சேகரித்தார்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}