- அ.சீ. லாவண்யா
வாழ்க்கையில் நாம் எதையெல்லாமோ செய்கிறோம்.. அதில் பலது நமக்குத் தேவையில்லாததாகத்தான் இருக்கும். தேவையானதை செய்வது நம்மிடையே மிக மிக குறைவாகவே இருக்கும். இது நமது தவறல்ல.. நம்ம டிசைனே அப்படித்தான்.
சரி அதை விடுங்க.. உங்களுக்காக ஒரு சூப்பரான 8 டிப்ஸ் சொல்றேன்.. அதை செஞ்சு பாருங்களேன்.. எவ்வளவோ பண்ணிட்டோம்.. இதை பண்ண மாட்டோமா.. வாங்க பார்க்கலாம்.
1. உணவு பழக்கங்கள்

காலை உணவு தவறாதீர்கள் -metabolism சரியாக இயங்க இது அவசியம். பழம் + காய்கறி நாள் ஒன்றுக்கு 4-5 வகைகள் சேர்க்கவும். அதிக எண்ணெய், ஆழ் வறுத்த உணவுகள் குறைக்கவும். தினமும் குறை 2-2.5 லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
2. உறக்கம்
பெரியவர்களுக்கு 7-8 மணி நேரம் நேர்மறையான உறக்கம் அவசியம். படுக்கும் நேரத்தில் mobile, TV தவிர்க்கவும் - மூளைக்கு ஓய்வு கிடைக்கும்.
3. உடற்பயிற்சி
தினமும் 30 நிமிடங்கள் brisk walking/வீட்டுப் பயிற்சி செய்யவும். நீண்ட நேரம் மேசை முன் அமர்ந்தால் 45 நிமிடத்துக்கு 5 நிமிடம் எழுந்து நகரவும்.
4. மனநலம்
தினமும் 10 நிமிடம் அமைதியான + ஆழ்ந்த சுவாசம் செய்யவும். சமூக உறவுகளை பராமரிக்கவும் தனிமை மன அழுத்தத்தை அதிகரிக்கும்.
5. இதயம் & இரத்த அழுத்தம்
உப்பு அளவு குறைக்கவும். கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை (வெள்ளை ரொட்டி, பேஸ்ட்ரி, ஃபாஸ்ட் ஃபுட்) தவிர்க்கவும். வாரத்திற்கு குறைந்தது 5 நாள் 30 நிமிடம் நடை அவசியம்.
6. நோய் எதிர்ப்பு சக்தி
எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி போன்ற விட்டமின்-C உணவுகள். மஞ்சள் பால், வெந்தயம், துளசி இயற்கை immune பூஸ்ட்ர்ஸ். ஆகியவை நமது உடலுக்கு நல்லது. அதை பாலோ பண்ணுங்க.
7. கீரைகள், பழங்கள்
பெண்களுக்கு சில வகை உணவு அவசியம். அதாவது இரத்த சோகைக்கு (Anaemia) பசலைக் கீரை முக்கியமானது. பேரீச்சம் பழமும் மிக மிக நல்லது. முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவது அவசியம். மாதவிடாய் காலத்தில் அதிகம் புரதம் + தண்ணீர் சத்து அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆண்கள் என்றால் அதிக stress jobs உள்ளவர்களுக்கு Omega-3 (நல்லெண்ணெய், சியா விதை) உதவி செய்யும். வயிற்றுப் பருமன் வராமல் இருக்க சர்க்கரைச் சத்து அடங்கிய பானங்களைத் தவிர்க்க வேண்டும்.
8. பல் & வாய்நலம்
பல் சுத்தமும், வாய் சுத்தமும் மிக மிக முக்கியமானது. காலை + இரவு (2 முறை) தவறாமல் பல் துலக்க வேண்டும். வாய் துர்நாற்றம் இருப்போர். 3 முறை கூட வாயை கிளின்ஸ் செய்வதை மேற்கொள்ளலாம். அதிக சர்க்கரை உள்ள snacks சாப்பிடுவதைக் குறைக்கவும்.
இதெல்லாவற்றையும் விட, நல்ல உறக்கம் நல்ல மனநிலை ஆகியவை நமது நல்ல ஆரோக்கியத்திற்கு மிக மிக முக்கியமானது. மேற்சொன்னதையெல்லாம் கடைப்பிடிப்பது அவ்வளவு கஷ்டம் அல்ல. டிரை பண்ணிப் பாருங்க.. நல்லா இருக்கும்.. நம் ஆயுளையும் வலுவாக்கும்.
(அ.சீ.லாவண்யா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆளுநர் வெளிநடப்பு.. மைக் ஆப் செய்யப்பட்டதாகவும் பரபரப்பு புகார்!
ஆளுநர் உரையை வாசிக்காமல் முரண்டு பிடிப்பது நல்லதல்ல.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என். ரவி.வெளியேறியது ஏன்?.. ஆளுநர் மாளிகை விளக்கம்
ஜனநாயகன் சென்சார் சான்றிதழ் வழக்கில் உத்தரவு ஒத்திவைப்பு
பொறுப்பேற்றதும் திருப்பரங்குன்றம் விவகாரம் பற்றி பேசிய பாஜக நிதின் நபின்
சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த விடியா திமுக அரசு... எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம்!
கவர்னரின் மைக் ஆஃப் செய்யப்படவில்லை...சபாநாயகர் அப்பாவு விளக்கம்
அம்பானி வீட்டு மின்சார கட்டணம் எவ்வளவு தெரியுமா? கேட்ட நீங்களே ஆசந்து போவீங்க!
யாருடன் கூட்டணி?...டிடிவி தினகரன் நாளை கட்சியினருடன் ஆலோசனை
{{comments.comment}}