சென்னை: திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களை சரியான வழியில் பார்த்து அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் வரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரலாம் என நடிகர் சூரி கூறியுள்ளார்.
இயக்குநர் பிரஷாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில், சூரி நடிப்பில் உருவாகி கடந்த வாரம்8 வெளிவந்த திரைப்படம் மாமன். இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. குடும்பம் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், சாதனை படைத்து வருகிறது. கடந்த 8 நாட்களில் உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ரூ. 24 கோடி வசூலித்துள்ளது.
இந்த நிலையில் மாமன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு வேண்டுகோள் எடுத்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,
ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது பலரின் கனவுகளுக்கும், உயிரோட்டமான உழைப்புகளுக்கும் சேர்ந்த ஒன்று.
இந்த உரை என் திரைப்படத்திற்காக மட்டுமல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன.
ஒரு படம் உருவாகிறது என்றால் அது ஒரு குழந்தை பிறப்பதை போல கதையிலிருந்து தொடங்கி படப்பிடிப்பு, பின்னணி, வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள், என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டி எழுப்பப்படுகிறது.
ஒரு படம் வென்றாலும், தோற்றாலும் அது ஒரு பயணம். அந்த பயணத்தில் வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள், அனைத்தும் கலந்திருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு அதை பெருமையாக பகிரும் போது அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு வியூ க்காக யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பை களைத்து விடுகிறோம்.
திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல. சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன. சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு.
இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல் திருட்டு பதிவிறக்கம் செய்வது சட்ட விரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல். எனவே, என் பணிவான வேண்டுகோள்.
திருட்டு பதிவிறக்கம் செய்யாதீர்கள் திரைப்படங்களை சரியான வழியில் பார்த்து அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் வரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால் திரையுலகம் இன்னும் உயரலாம் என பதிவிட்டுள்ளார்.
Teachers Day: செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுவது ஏன்?
GST reforms: இதை வரவேற்கிறேன்.. ஆனால் எதற்காக இந்த திடீர் நடவடிக்கை.. ப.சிதம்பரம் கேள்வி
GST reforms: மக்கள் வாழ்க்கை மேம்படும்.. வர்த்தகம் எளிதாகும்.. பொருளாதாரம் வலுப்படும்.. பிரதமர் மோடி
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 04, 2025... யோகம் தேடி வர போகுது
GST reforms: புதிய ஜிஎஸ்டி.,யால் எவை எவை விலை குறையும்.. எது உயரும்.. பொருட்களின் முழு விபரம் !
ஜிஎஸ்டி வரி அடுக்குகள் நீக்கம்.. ஜிஎஸ்டியில் முக்கிய மாற்றம்.. புதிய வரிகள் செப்.,22 முதல் அமல்
படத்தில் வில்லன்...நிஜத்தில் ஹீரோ...வெள்ளம் பாதித்த மக்களுக்காக ஓடி வந்த சோனு சூட்
வெனிசுலா விவகாரம்...டிரம்ப்க்கு அமெரிக்க கோர்ட் கொடுத்த அடுத்த குட்டு
அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
{{comments.comment}}