கம்பம்: தேனி மாவட்டம் வண்ணாத்திப்பாறைப் பகுதி வழியாக காட்டுக்குள் நுழைந்த முதியவர் ஈஸ்வரன் என்பவர் வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பும் நிலவுகிறது.
வனத்துறை துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வயலில் காவல் காப்பதற்காக போனவர் ஈஸ்வரன் என்று உறவினர்கள் கூறியுள்ளனர். ஆனால் வனத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், வனத்துறையினர் தடுத்து நிறுத்தியபோது அரிவாளால் தாக்க வந்ததாகவும், இதனால்தான் சுடப்பட்டதாகவும், வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன் பட்டியைச் சேர்ந்தவர்தான் ஈஸ்வரன். வண்ணாத்திப்பாறைப் பகுதியில் இவர் காட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவரை தடுத்து நிறுத்த முயன்றபோது ஏற்பட்ட மோதலில்தான் வனத்துறையினர் சுட்டதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் உண்மையில் என்ன நடந்தது என்பது இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை.
கொல்லப்பட்ட ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பிரேதப் பரிசோதனை நடந்து வருகிறது.
ஒரு முதியவர் எப்படி வனத்துறையினரை எதிர்க்க முடியும்.. அதுவும் துப்பாக்கிகளுடன் வனத்துறையினர் இருக்கும்போது எதிர்க்கும் தைரியம் எப்படி வரும்.. சாதாரணமான முறையில் ஈஸ்வரனை தடுத்து அனுப்பியிருக்கலாமே.. அதை விடுத்து சுடும் அளவுக்கு நிலைமை போனது ஏன் என்று தெரியவில்லை. இந்த சம்பவத்தால் பதட்டம் நிலவுவதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}