திருப்பதி: திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிழந்த நிலையில், இதற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரோஜா கூறியுள்ளார்.
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை முதல் 10 நாட்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்படும். இந்த 10 நாட்களும் ஏழுமலையானை வழிபாடு செய்து சொர்க்கவாசல் திறப்பை பார்ப்பதற்கு தேவையான டிக்கெட்டுகளை ரூ.300 விலையில் ஏற்கனவே தேவஸ்தனம் ஆன்லைனின் விற்பனை செய்தது. இதனையடுத்து இம்மாதம் 10,11 மற்றும் 12 ஆகிய நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்களை நேற்று இரவு தேவஸ்தனம் வழங்க துவங்கியது. இந்த இலவச டோக்கன்கள் திருப்பதியில் அமைக்கப்பட்டுள்ள எட்டு கவுண்டர்கள் மற்றும் திருப்பதி மலையில் அமைக்கப்பட்ட ஒரு கவுண்டர்களிலும் விநியோகம் செய்யப்பட்டது.
இலவச தரிசன டோக்கன் மற்றும் தரிசன டிக்கெட் இல்லாதவர்களுக்கு இந்த 10 நாட்களும் அனுமதி கிடையாது என்பதால், எப்படியாவது வைகுண்ட ஏகாதசி நாள் அன்று ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் இலவச டோக்கன்களை வாங்க மக்கள் முண்டியடித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் நடிகையுமான ரோஜா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், திருப்பதியில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசிக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதற்கான ஏற்பாடுகுளும் செய்யப்படும். ஆனால், வரலாற்றில் இதுவரையில் நடக்காத வகையில் இந்தாண்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முதல்வர் சந்திரபாபு மற்றும் உள்துறை அமைச்சர், செயல்அதிகாரிகள், எஸ்பி உள்ளிட்ட அனைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும்.
அதிகாரிகளையும், அறங்காவலர்களையும் யார் நியமித்தது. சேவை செய்யும் எண்ணம் யாருக்கும் இல்லை. பக்தர்களுக்கு குறைந்த பட்ச வசதிகள் கூட இல்லை. இது அலட்சியத்தால் நடந்த மரணங்கள் அல்ல. ஆந்திர அரசின் கொலைகள். லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜினாமா செய்ய வைப்பாரா?
புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜூனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}