கோவை: வருங்கால தலைமுறைக்கு இளையராஜாவின் இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது. நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் இசைஞானியின் இசையின் துணைகோண்டே கடக்கிறோம் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் இசைஞானி இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்றே கோவை வந்தார் இசையானி இளையராஜா. தனியார் நட்சத்திர ஹோட்டலில் விளம்பரதாரர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜாவுக்கு ரோட்டரி கிளப் சார்பில் தொழில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. அதன்பின்னர் ஹோட்டலில் தங்கியுள்ள இளையராஜாவை தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசியுள்ளார்.
அதன்பின்னர் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், கோவையில், நமது இசைஞானி, பத்மவிபூஷண் இளையராஜா அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

நம் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், இசைஞானி அவர்களின் இசையின் துணை கொண்டே கடக்கிறோம். நமது வருங்கால தலைமுறைகளுக்கும், அவரது இசையே அருமருந்தாக இருக்கப் போகிறது என்பதை விட, மகிழ்ச்சி தருவது வேறென்ன இருந்து விடப் போகிறது என்று தெரிவித்துள்ளார்.
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
{{comments.comment}}