ஓய்வு பெற்ற ஊழியர்களின் கோரிக்கைகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Sep 02, 2025,06:11 PM IST

சென்னை: தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க, தனி நிதியம் அமைத்து, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அவர்களின் இதர கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழகத்தில், தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பணியாளர்கள் சுமார் 2,000 பேர் உள்ளனர். தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிபவர்கள்தான், கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து, அடுத்த நிலையில் உள்ள மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் கொண்டு செல்பவர்கள்.  


ஆனால், தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டும், தமிழக அரசு ஓய்வூதியம் வழங்குவதில்லை. இது குறித்து, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம், பலமுறை கோரிக்கை எழுப்பியும், தமிழக அரசு பாராமுகமாக இருப்பது துரதிருஷ்டவசமானது. பொதுவாக, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது, ₹1,000 முதல், ₹2,734 வரையே வழங்கப்படுகிறது. மிகவும் குறைந்த மாத வருமானம் காரணமாக, பெரும்பாலான தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள், இந்த ஓய்வூதியத் திட்டத்தில் இணையாததால், அவர்களுக்கு இந்தக் குறைந்தபட்ச ஓய்வூதியம் கூட கிடைக்காமல் மிகவும் கடினமான சூழலில் இருக்கிறார்கள். 




தமிழ்நாடு தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களின் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு, கருணை ஓய்வூதியம் வழங்கக் கோரி, தமிழக பாஜக மாநிலத் தலைவர், அண்ணன்  நயினார் நாகேந்திரன் அவர்கள், கடந்த 14.03.2025 அன்று, சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதனை அடுத்தே, இத்தனை நாட்களாக, ஓய்வு பெற்ற தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களின் கோரிக்கைகளைக் கண்டுகொள்ளாமல் இருந்த பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேலாண்மைத் துறை, அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதில் அளித்துள்ளது. ஆனால், ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, தற்போது தனி நிதியம் பராமரிக்கப்படுவதில்லை என்றும், எதிர்காலத்தில், ஊழியர்களின் பங்களிப்பு இருந்தால், ஓய்வூதியம் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.


விவசாயிகளிடம் நேரடியாகப் பால் கொள்முதல் செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. அதற்கு தனி நிதியம் அமைக்கவில்லை. ஆனால், அவர்கள் கொள்முதல் செய்த பாலை, அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் இரண்டாம், மூன்றாம் கட்ட நிலையிலுள்ள ஊழியர்களுக்கு மட்டும் ஓய்வூதியம் வழங்க, தனி நிதியம் பராமரிக்கப்பட்டு, ஓய்வூதியம் வழங்கப்படுகிறது என்பது, ஊழியர்களிடையே ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்கள் இல்லை என்றால், பால் உற்பத்தித் துறைக்கே தமிழகத்தில் வேலை இருக்காது என்பதுதான் உண்மையான நிலைமை. இத்தகைய சூழலில், தொடக்க பால் கூட்டுறவு சங்க ஊழியர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருவது வருந்தத்தக்கது மட்டுமின்றி, சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது.


சுமார் 2,000 தொடக்க பால் கூட்டுறவு சங்க ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்கு பெரிய அளவில் நிதிச்சுமை ஏற்படப் போவதில்லை. ஆனாலும், அவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க மனமில்லாமல், அவர்கள் கோரிக்கையைத் தொடர்ந்து திமுக அரசு புறக்கணித்து வருவது கண்டிக்கத்தக்கது.


உடனடியாக, பால் உற்பத்தித் துறையில், மாவட்ட மற்றும் மாநில அளவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தொடக்க பால் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க, தனி நிதியம் அமைத்து, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அவர்களின் இதர கோரிக்கைகளான, மருத்துவக் காப்பீடு, தினசரி 500 மி.லி. பால், மற்றும் பண்டிகை காலங்களில் ஆவின் இனிப்பு, நெய் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடங்கியது...எந்தெந்த பொருட்களின் விலை குறையலாம்?

news

கிடுகிடு வென உயர்ந்து புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.640 உயர்வு!

news

ஓணம் வந்தல்லோ.. திருவோணம் வந்தல்லோ.. களை கட்டி வரும் கேரளத்து திருவிழா!

news

எப்போ தான் பாஸ் களத்துக்கு வருவீங்க?.. குமுறும் தவெக.,வினர்.. வேகம் காட்டுவாரா விஜய்?

news

"ஒவ்வொரு திருமணமும் சிறப்பானது".. கிரிஸில்டாவின் புகாருக்கு.. மாதம்பட்டி ரங்கராஜ் தந்த மறைமுக பதில்

news

அனிருத் இல்லாமல் இனி இயக்க மாட்டேன்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் குழப்பம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 03, 2025... மகிழ்ச்சி அதிகரிக்க போகும் ராசிகள்

news

செப். 5ம் தேதி மனம் திறந்து பேசுவேன்.. செங்கோட்டையன் திடீர் அறிவிப்பு..அதிமுகவில் மீண்டும் சலசலப்பு

news

ஒன்றிணையாத அதிமுக.. ஓபிஎஸ்ஸைக் கண்டுக்காத இபிஎஸ்.. மீண்டும் சேர்க்காததற்கு இது தான் காரணமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்