சென்னை: தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பி சேள்விக்கு முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்துள்ளார்.
தியாகி மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாளையொட்டி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தென்காசி மாவட்டம் நெற்கட்டும் சேவலில் உள்ள பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில்,
அதிமுகவில் இருந்து பிரிந்திருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என சசிகலா வெளியிட்ட அறிக்கையை நான் மனதார வரவேற்கிறேன். சசிகலாவுக்கு வலுசேர்க்கும் வகையில் அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் நான் ஈடுபடுகிறேன். எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திவிட்டதாக பிரேமலதா விஜயகாந்த கூறியதிலேயே பதில் இருக்கிறது.

விஜய் தற்போது தான் அரசியல் இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். தேர்தலின் நின்று வென்று இலக்கை எப்படி அடைகிறார், எவ்வாறு செயல்படுகிறார் என்பதை எல்லாம் பார்க்க வேண்டும். அவருடைய இயக்கத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். இதுவரை யாரும் என்னுடன் கூட்டணிக்காக பேசவில்லை. எதிர்காலத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
கண்ணீர் சிந்தும் பூமி
ஜெம் கிரானைட் வீரமணி விவகாரம்: தவெக-திமுக இடையே முற்றும் மோதல்
நடிகை அம்பிகா மீது சகோதரி ராதா பரபரப்பு புகார்: ரூ.46 கோடி மோசடி செய்ததாக போலீசில் புகார்
"நிர்வாக அறிவு இருக்கிறதா?" – தவெக அரசை கடுமையாக விமர்சித்து மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!
மா(மே)ரியம்மாள் பவனம்.. ஒரு நிமிடக் கதை (19)
வங்கக்கடலில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
என் தமிழ்.. ஏன் தமிழ்?
ஏகாந்தம்.. அழகிய முழு நிலவொளியில் ஆனந்த ராகம் பாடி!
Short Story: காணாமல் போன கண்ணன்
{{comments.comment}}