புதுச்சேரி: புதுச்சேரி சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் சந்திரபிரியங்கா வேதனை வெளியிட்டுள்ளார்.
மனித வகையிலேயே சேர்க்க முடியாத மிகக் கொடூரமான அக்கிரமத்தை சில கயவர்கள் புதுச்சேரியில் அரங்கேற்றியுள்ளனர். 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளது அந்தக் கும்பல். அந்த முயற்சியின்போது அந்தச் சிறுமியை கொடூரமாக கொலை செய்து மூட்டையில் போட்டு கட்டி சாக்கடையில் போட்டு விட்டு தப்பியுள்ளனர்.
டெல்லியில் நடந்த கொடூர பாலியல் பலாத்கார சம்பவங்களை மிஞ்சும் கொடுமையாக நம்ம புதுச்சேரியில் நடந்துள்ள இந்த சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது. இந்த கயவர்களை நிற்க வைத்து சுட வேண்டும் என்று அங்குள்ள மக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சரும், நெடுங்காடு எம்எல்ஏவுமான சந்திரபிரியங்கா வேதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் போட்டுள்ள டிவீட்:
பெண்ணாகிப் போனதாலே இக்கொடுமைகளை சந்தித்தாக வேண்டுமென சாபக்கேடா?
தேசிய பெண் குழந்தைகள் தினம்.. உலக மகளிர் தினம்.. சிறுமிக்கு நேர்ந்த ஜீரணிக்க முடியாத கொடுமை அனைத்தையும் கேள்விக்குறியாக்குகிறது... மனிதமும், மனச்சாட்சியும், சமூகப் பொறுப்பும் எங்கே சென்றது. இப்படியொரு கொடுமை இனியும் நடக்கக் கூடாது.
குழந்தைகளை தெய்வமாகப் பார்க்க வேண்டிய மனிதம் போதை வெறியில் மிருகமாக மாறுகிறதெனில் சட்டம் தன் சாட்டையை கடுமையாக சுழற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தில் அரசு மிகக்கடுமையான நடவடிக்கை எடுத்து பெண்களுக்கு அனைத்துவிதமான பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும்.
குழந்தையை இழந்துவாடும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. கனத்த மனதோடும் கண்ணீரோடும் அன்பு மகளின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் சந்திரபிரியங்கா.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : நான்கு முனை போட்டி உறுதியானது
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026 : திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் தள்ளிவைப்பு: அமைச்சர் அருண்ராஜ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இதுதான் சூப்பர் Couple Goal.. மனைவி மாநகராட்சி ஆணையர்.. கணவர் எஸ்.பி.. வேலூரில்!
சர்வதேச சுடோகு தினம் .. மூளைக்கு வேலை கொடுக்கும் புதிர் விளையாட்டு!
"லட்க்கி கொய்லா கொஞ்சம் கொடுப்பா".. நாக்பூரை பதற வைத்த மெட்ராஸ்!
சிந்தனைச் சிதறல்.. வடிப்பது சிற்பம் தான் என்றாலும்.. சிறுகச் சிறுக சிதைக்கும் உளிகள்!
சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: நகராட்சி சார்பில் மாணவர்களுக்கு தட்டு, டம்ளர் வழங்கல்
{{comments.comment}}