திமுக ஆட்சியில் நின்றாலும் வரி.. உட்கார்ந்தாலும் வரி... சொல்கிறார் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார

Oct 08, 2024,05:10 PM IST

சென்னை: திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நின்றாலும் வரி, உட்கார்ந்தாலும் வரி போடுகிறார்கள். மக்களை துன்புறுத்தி அரசு கருவூலத்தை நிரப்பும் வேலையை செய்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.


திமுக அரசை கண்டித்து, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பத்திர பதிவு கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு மற்றும் சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவை தமிழகத்தில் ஏற்படுவதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவித்திருந்தார்.




அதன்படி மாநிலம் முழுவதிலும் அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்,  மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.


சென்னையில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் பேசும்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அவர் கூறியதாவது: வரி விஷயத்தில் சென்னை மாநகராட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது. மக்களை துன்புறுத்தி அரசு கருவூலத்தை நிரப்பும் வேலையை செய்கின்றனர். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து நின்றாலும் வரி, உட்கார்ந்தாலும் வரி போடுகிறார்கள். 


வரி விஷயத்தில் சென்னை மாநகராட்சி தூங்கிக் கொண்டிருக்கிறது. விமான சாகச நிகழ்ச்சியின் போது பரிதாபமாக 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் இறப்புக்கு வருத்தப்பட வேண்டிய நேரத்தில் கலைஞர் நினைவு பூங்காவை திறந்து வைக்கின்றனர் என்றார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்


சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!

news

8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?

news

எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்

news

அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!

news

மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!

news

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!

news

ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?

news

என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்