தோற்றுக்கொண்டே இருக்கும் பெங்களூரு அணிபோலதான் தமிழ்நாட்டில் பாஜக.. ஜெயக்குமார் கிண்டல்

Jun 07, 2024,06:55 PM IST

சென்னை: புள்ளி விவரம் கொடுக்கும் ஐபிஎல் அதிகாரிபோல் தான் இருக்கிறார் அண்ணாமலை. தோற்றுக்கொண்டே இருக்கும் பெங்களூரு அணிபோலதான் தமிழ்நாட்டில் பாஜக இருக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நக்கலாக கூறியுள்ளார்.


அதிமுக - பாஜக இடையே வாக்குவாதம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. உன்னால நான் கெட்டேன்.. என்னால நீ கெட்ட என்பது போல இரு தரப்பும் மாறி மாறி புகார் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:


தேர்தலில் வெற்றி தோல்வி மாறி மாறி தான் வரும். அண்ணாமலையை பொருத்த வரை ஒரு புள்ளி ராஜா ஆயிட்டார். அண்ணாமலையின் பேச்சுகள் ஒருகட்சியின் மாநில தலைவர் பேச்சு போல இல்லை. தமிழ்நாட்டுக்கு மோடியை எட்டு முறை அழைத்து வந்தும் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியவில்லை. 2014ல் வாங்கிய வாக்குகளை விட தற்போது பாஜக குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. 




இதை அண்ணாமலையை சொல்ல சொல்லுங்க பார்ப்போம். இது எல்லாம் சொல்ல மாட்டாரு. இது என்ன சொல்ல மறந்த கதையா. 10 வருசத்துல ஒட்டு சதவீதம் குறைந்திருக்கு. பாஜக தமிழ்நாட்டில் பெங்களூரு அணிபோல தான்  தோற்றுக்கொண்டே தான் இருப்பார்கள். நாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் போல. 30 வருடம் ஆண்டு பல வெற்றிகளை பெற்றுள்ளோம். 


இனி வரும் தேர்தலில் பல வெற்றிகளை குவிக்கப் போகிறோம். இது வரலாற்று சாதனையாகும். எங்களை பற்றி பேச என்ன முகாந்திரம் இருக்கு.  அதவிட்டுட்டு, சாதி, இனம், மதம் பற்றி பேசி என்ன செய்யப் போறீங்க. வடக்குல வச்சாம் பாரு ஆப்பு. இன்னைக்கு 2 பேரு தான் கிங் மேக்கர். ஒன்னு சந்திரபாபு நாயுடு, மற்றொன்று நிதிஷ்குமார்.அங்கயாவது ஒன்று ரெண்டு கிடைத்திருக்கு. இங்க தமிழ்நாட்டில பாஜகவால் கால் ஊன்றவில்லை. புள்ளி விபரத்தை வைத்துக் கொண்டு ஒன்னும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்