சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக்கொடி நாளை அறிமுகம் படுத்தப்பட உள்ள நிலையில் இன்னும் களத்திற்கு வரவில்லை. விஜய் கட்சி தொடங்குவதை ஏன் இவர்கள் தடுக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விஜயை கொண்டாடி வரும் நிலையில் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சிக்கு பேராதரவு நிலவி வருகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது கமிட்டான படங்களை முடித்துவிட்டு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முழுமையாக களமிறங்க உள்ள விஜய்க்காக ரசிகர்கள் தொண்டர்கள் என அனைவரும் காத்து வருகின்றனர்.
இதற்கிடையே கட்சி மாநாடு செப்டம்பர் 22 மிக பிரம்மாண்டமாக நடத்த தமிழக வெற்றிக் கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. அப்போது இக்கட்சியின் கொடி மற்றும் சின்னம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் மாநாடு நடத்த ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தவெகவின் கட்சி கொடி அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இவ்விழாவை மிகவும் எளிமையாக நடத்த கட்சி சார்பாக முன்னேற்பாடுகளையும் செய்து வருகிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, இன்னும் களத்திற்கு வரவே இல்லை. விஜய் கட்சி தொடங்குவதை ஏன் இவர்கள் தடுக்கிறார்கள். தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடி அறிமுக விழாவிற்கு முறையாக அனுமதி வழங்குவதில் என்ன தவறு உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வி எழுப்பி உள்ளார்.
அதேபோல் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமார் தமிழக வெற்றி கழகத்தால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தொடர்ந்து விஜய்க்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். கொடி அறிமுக விழாவிற்கு எவ்வளவு தடங்கல் செய்ய முடியுமோ அவ்வளவு தடங்கல் விஜய்க்கு கொடுக்கப்பட்டதாக சொல்கிறார்கள் என கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}