சிறையில் செந்தில் பாலாஜி.. 28-வது முறையாக காவலை நீட்டித்து சென்னை கோர்ட் உத்தரவு

Mar 21, 2024,05:48 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை மார்ச் 22ம் தேதி (நாளை) வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் செந்தில் பாலாஜியின்  காவல் 28வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 


சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தணை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் செந்தில் பாலாஜி. அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. அப்போது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணிக்கான வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக கடந்த ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியின் மீது அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.




கைது செய்யப்பட்ட போதே செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. கோர்ட் உத்தரவின்படி அரசு மருத்துவமனையில் போதிய சிகிச்சை இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கேயே அவருடைய உடல் நலம் கண்காணிக்கப்பட்டும் வந்தது. 


இந்நிலையில் பல முறை ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து மனுக்களும் தள்ளுபடியும் செய்யப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி. அங்கும் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் தனது அமைச்சர் பதவியையும் சமீபத்தில் ராஜினாமா செய்தார்.


இத்தனை செய்தும் கூட செந்தில் பாலாஜிக்கு இதுவரை நிவாரணம் கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 21ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், இன்று அவர் புழல் சிறையில் இருந்து காணொளி காட்சி மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.  அவருக்கு சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.அல்லி சிறைக் காவலை மார்ச் 22ம் தேதி (நாளை) வரை நீட்டித்து உத்தரவிட்டார்.  இதன் மூலம்  செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்