சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காலியாக உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்த இடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. அதன்படி மார்ச் 28 முதல் ஏப்ரல் 29 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறபட்டன. இதற்கான எழுத்து தேர்வு ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்திருந்தது. இதன் காரணமாக ஏராளமானோர் இந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தனர்.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மே 15ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு முன்னர் அறிவித்தது போன்றே ஆகஸ்ட் 4ம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பு ஆசிரியர் பணிக்காக விண்ணப்பிக்காமல் காத்திருப்போருக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணிபுரிய போட்டி எழுத்துத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், நேர்முகத்தேர்வுக்கு 300 மதிப்பெண்கள் என்கிற அடிப்படையில் தேர்வு முறை நடத்தப்படவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டு உதவி பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. அவர்களின் முந்தைய விண்ணப்பங்கள் இந்த தேர்வுக்கு பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி: உதவிப் பேராசிரியர்
காலியிடங்கள்: 3,921 நடப்பு காலிப் பணியிடங்கள், 79 பின்னடைவு காலிப் பணியிடங்கள் என மொத்தம் 4,000 காலி பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
சம்பளம்: மாதம் ரூ.57,700- 1,82,400
கூடுதல் விவரங்களை www.trb.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}