டோக்கியோ: ஜப்பானுக்குப் பயணம் செய்ய ஆசைப்படுகிறீர்களா? டோக்கியோவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கவலைப்படுகிறீர்களா? அப்படியானால், உங்களுக்கு ஒரு அற்புதமான செய்தி! Japan Airlines (JAL) ஒரு சூப்பர் சலுகையை அறிவித்துள்ளது. JAL மூலம் சர்வதேச விமான டிக்கெட்டை முன்பதிவு செய்தால், ஜப்பானுக்குள் இலவசமாக விமானத்தில் பறக்கலாம்!
இதன் மூலம் நீங்கள்
டோக்கியோவில் தரையிறங்கிவிட்டு, ஜப்பானின் மற்ற அழகான, அதே சமயம் கூட்டமில்லாத இடங்களான சப்போரோ, ககோஷிமா அல்லது ஒகினாவாவில் உள்ள நாஹா போன்ற நகரங்களுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம். இதன் மூலம் ஜப்பானின் அமைதியான மற்றும் கண்கவர் இடங்களை நிதானமாக ரசிக்க முடியும்.
சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம் ஜப்பான்:
ஜப்பான் உலக
சுற்றுலாப் பயணிகளின் விருப்பமான இடமாக மாறியுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கானோர் ஜப்பானுக்கு வருவதால், டோக்கியோ போன்ற முக்கிய நகரங்களில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், ஜப்பானின் அமைதியான மற்றும் அழகான பகுதிகளைக் காண ஒரு வழி இருக்கிறது. JAL நிறுவனம் வழங்கும் இந்த இலவச உள்நாட்டு விமானச் சேவை, சர்வதேசப் பயணிகளுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது.
இந்தச் சலுகையைப் பெற, நீங்கள் JAL விமான நிறுவனத்தில் ஜப்பானுக்கான சர்வதேச விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய வேண்டும். அத்துடன், உங்களுக்கான உள்நாட்டு விமானப் பயணத்தையும் சேர்த்தே முன்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், JAL சேவை வழங்கும் 64 உள்நாட்டு இடங்களுக்கு இலவசமாகப் பறக்கலாம். ஒசாகா போன்ற பரபரப்பான நகரங்கள் முதல் யகுஷிமா போன்ற பசுமையான தீவுகள் அல்லது பெப்புவின் வெந்நீர் ஊற்றுகள் வரை, ஜப்பானின் எந்தப் பகுதிக்கும் இலவசமாகப் பயணிக்க முடியும்.
யார் யார் பயன்பெறலாம்?
இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் இருந்து ஜப்பானுக்கு வரும் பயணிகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும். பெரும்பாலான பயணிகள் தங்கள் பயணத்தின்போது ஸ்டாப்ஓவர் கட்டணம் (stopover fees) எதுவும் செலுத்தத் தேவையில்லை. வட அமெரிக்கா அல்லது சீனாவில் இருந்து வரும் பயணிகள், 24 மணி நேரத்துக்கு மேல் தங்கினால் மட்டும் சிறிய கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
இலவச உள்நாட்டு விமானப் பயணத்துடன், செக்டு லக்கேஜ் (checked luggage) வசதியும் உண்டு. எகானமி (Economy) மற்றும் பிரீமியம் எகானமி (Premium Economy) வகுப்பில் பயணிப்பவர்கள் 2 பைகள் வரையிலும், பிசினஸ் (Business) மற்றும் முதல் வகுப்பில் (First Class) பயணிப்பவர்கள் 3 பைகள் வரையிலும் லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.
இதன் மூலம், கடற்கரைக்குச் செல்லலாம், மலைகளில் நடைப்பயணம் செய்யலாம் அல்லது அமைதியான ஒரு கிராமத்தில் சுவையான ராமென் (Ramen) சாப்பிடலாம். இந்தச் சலுகை "ஜப்பானில் இலவச விமானங்கள்" (Free Flights in Japan) என்ற பெயரில் அறியப்படுகிறது.
பொதுவாக, ஜப்பானைச் சுற்றிப் பார்க்க பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் Japan Rail Pass-ஐ நம்பியிருந்தனர். ஆனால், 2023ஆம் ஆண்டில் JR Pass-ன் விலை கணிசமாக அதிகரித்ததால், உள்நாட்டு விமானப் பயணத்துக்கு தற்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதுவும் JAL வழங்கும் இந்த இலவச விமானச் சலுகை, பயணிகளுக்கு ஒரு மிகப்பெரிய வரப்பிரசாதம்.
உதாரணமாக, டோக்கியோவில் இருந்து ஒசாகாவுக்கு ஷின்கன்சென் (Shinkansen) ரயிலில் செல்ல ¥14,000 (சுமார் $94 அமெரிக்க டாலர்கள்) செலவாகும். ஆனால், ஜப்பான் ஏர்லைன்ஸஸ் சலுகையின் மூலம் நீங்கள் இலவசமாக விமானத்தில் ஒசாகாவுக்குச் சென்று, கன்சாய் பிராந்தியத்தை (கியோட்டோ மற்றும் நாரா போன்ற நகரங்கள் அடங்கிய பகுதி) சுற்றிப் பார்க்கலாம். அதன் பிறகு மெதுவாக ரயிலில் டோக்கியோவுக்குத் திரும்பி வரலாம். அல்லது இன்னும் சாகசமாக, ககோஷிமாவுக்கு விமானத்தில் சென்று, எரிமலைக்கு அருகில் உள்ள கடைகளில் உள்ளூர் உணவுகளை சுவைக்கலாம்.
இந்தச் சலுகையைப் பயன்படுத்தி, ஜப்பானின் கலாச்சாரம், இயற்கை அழகு மற்றும் அமைதியான பகுதிகளைக் கண்டறிய இது ஒரு அற்புதமான வாய்ப்பாகும்.
{{comments.comment}}