சென்னை: இந்தியா - தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி 28ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மகளிர் மற்றும் தென் ஆப்பிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கம் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் 28ம் தேதி தொடங்குகிறது. ஜூலை 1ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டி தினசரி காலை 9.30 மணிக்குத் தொடங்கும்.
இப்போட்டியை ரசிகர்கள் இலவசமாக கண்டு களிக்கலாம் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, சி, டி, இ மற்றும் ஐ, ஜே, கே ஆகிய ஸ்டாண்டுகளில் ரசிகர்கள் இலவசமாக அமர்ந்து போட்டியைப் பார்த்து ரசிக்கலாம். விக்டோரியா ஹாஸ்டல் நுழைவாயில் வழியாக சி டி இ ஸ்டாண்டுகளுக்குச் செல்லலாம். இந்த ஸ்டாண்டுகள் நிரம்பியவுடன் வாலாஜா சாலை வழியாக ஐ ஜே கே ஸ்டாண்டுகளுக்குச் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெஸ்ட் போட்டியைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் சென்னையிலேயே நடைபெறவுள்ளது. ஜூலை 5ம் தேதி முதல் போட்டியும், 7ம் தேதி 2வது போட்டியும், 9ம் தேதி மூன்றாவது போட்டியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளுக்கு ரூ. 150 கட்டணமாக வசூலிக்கப்படும். இவற்றை பேடிஎம் இன்சைடர் ஆப் மூலமாக பெறலாம் என்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!
குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!
எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு
குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு
தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!
Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?
{{comments.comment}}