சென்னை: பாஜக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளில், இரண்டு தொகுதியின் வேட்பாளர்களை இன்று அறிவித்தார் தமாகா தலைவர் ஜி கே வாசன். இந்த தேர்தலில் தங்கள் கட்சி உறுதியாக வெற்றி பெறும் என நம்பிக்கையுடன் அவர் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் வேணுகோபால் அவர்களும், ஈரோடு தொகுதியில் விஜயகுமார் அவர்களும் போட்டியிடுகின்றனர். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை நாளை மறுதினம் அறிவிப்பதாக ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
தமாகா தலைவர் ஜி கே வாசன் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், லோக்சபா தேர்தலை முன்னிட்டு 40 பாராளுமன்ற தொகுதிகளில் புதுவைத் தொகுதி உட்பட அனைத்து கட்சிகளின் ஆதரவோடு மக்களை சந்தித்து வாக்கு கேட்டு வெற்றி பெறக்கூடிய நல்ல நிலையை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தும் என நம்புகிறேன். மார்ச் 28 ஆம் தேதி எனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி ஏப்ரல் 17 வரை தொடர்ந்து 21 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறேன். இதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பின்னர் அறிவிப்பேன். இந்த தேர்தலில் வெற்றி என்பது உறுதி. எங்கள் கூட்டணியின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.
பாஜகவின் கூட்டணியில் தமாகா மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஈரோடு பாராளுமன்ற தொகுதி, ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி, ஆகிய மூன்று தொகுதிகளில் எங்களுடைய வெற்றி வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவார்கள். அதில் ஸ்ரீபெரும்புத்தூரில் வேணுகோபால் போட்டியிடுகிறார். ஈரோடு தொகுதியில் விஜயகுமார் போட்டியிடுகிறார். தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பை நாளை மறுதினம் அறிவிப்பேன் என கூறினார்.
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
எழுதுகிறேன் என் மனதை (கடிதக் கவிதை)
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
Kodumudi Brahma temple: கொடுமுடி பிரம்மா சன்னதியும், வன்னி மரத்தின் சிறப்புகளும்!
நேபாளத்தில் ஓயாத அமளி.. அடுத்தடுத்து அமைச்சர்கள் ராஜினாமா.. அரசு கவிழ்கிறதா?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
தொடர் புதிய உச்சத்தில் தங்கம் விலை... கிடுகிடு வென உயர்ந்து சவரன் ரூ.81,000த்தை கடந்தது!
{{comments.comment}}