சென்னை : தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் லோக்சபா தேர்தலில் போட்டியிட போகும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் தலைவர்கள் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார். அதோடு வேட்பாளர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 01 ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 20ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி நடந்து வருகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்களின் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்த வரிசையில் இன்று தமாக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார்.
பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாக.,விற்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகள் தமாக.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தமாக வேட்பாளர் பட்டியல் :
ஈரோடு - விஜயக்குமார்
ஸ்ரீபெரும்புதூர் - வேணுகோபால்
தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை மார்ச் 24ம் தேதி வெளியிட உள்ளதாக ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார். மேலும் இந்த தேர்தலில் தமாக., வேட்பாளர்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் இந்த தொகுதியில் சிவசாமி வேலுமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் தூத்துக்குடி தொகுதியிலும் மும்முனை போட்டி நிலவுகிறது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}