ஜி20 மாநாடு புறக்கணிப்பா?.. ஐரோப்பா டூர் செல்லும் ராகுல் காந்தி

Sep 06, 2023,04:26 PM IST
டில்லி : இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒரு வார பயணமாக ஐரோப்பா டூர் சென்றுள்ளார்.

டில்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 நாடு நடைபெற உள்ளது. இதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் நாளை மற்றும் நாளை மறுநாள் இந்தியா வர உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் ஆகியோரின் வருகையை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், நாட்டின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. 

உலக தலைவர்கள் இந்தியா வரும் சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று ஐரோப்பாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த ஒரு வார பயணத்தின் போது அவர் ஐரோப்பிய யூனியனின் வழக்கறிஞர்கள், மாணவர்கள், இந்திய வம்சாவளியினர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளதாக சொல்லப்படுகிறது. 

The Hague நகரில் செப்டம்பர் 7 ம் தேதி ஐரோப்பிய வழக்கறீஞர்களை ராகுல் காந்தி சந்திக்க உள்ளார். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 08 ம் தேதி பாரிஸ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கூட்டத்தில் மாணவர்களிடையே ராகுல் காந்தி பேச உள்ளார்.

செப்டம்பர் 9 ம் தேதி பாரிசில் நடக்கும் Labour union of France கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, செப்டம்பர் 10 ம் தேதி நார்வே செல்ல உள்ளார். அங்கு ஓஸ்லோ பகுதியில் நடக்கும் கூட்டத்தில் இந்திய வம்சாவளியினரை அவர் சந்தித்து பேச உள்ளார். செப்டம்பர் 11 ம் தேதியே ராகுல் காந்தி இந்தியா திரும்ப உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது ஜி20 மாநாடு முடிந்து ஒரு நாள் கழிந்த பிறகே ராகுல் காந்தி இந்தியா திரும்ப உள்ளார். 

30 நாடுகளை சேர்ந்த தலைவர்கள், சிறப்பு விருந்தினர்கள், 14 சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளும் ஜி20 மாநாட்டை புறக்கணிக்கும் விதமாக ராகுல் காந்தி வெளிநாடு புறப்பட்டு சொல்வதாக சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

news

உன்னையே கதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா!

அதிகம் பார்க்கும் செய்திகள்