கொரோனா பாசிட்டிவ்.. ஸ்பெயின் அதிபர்.. ஜி 20 மாநாட்டில்.. பங்கேற்க மாட்டார்!

Sep 08, 2023,04:13 PM IST
புதுடெல்லி: புதுடெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதியில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளது.

ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவிலும், தெற்கு ஆசியாவிலும் நடைபெறும் முதல் மாநாடு. இந்த மாநாட்டில் 19 உலக நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய பிரதிநிதிகள் ஒன்று கூடி பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர். பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வர உள்ளனர். இதற்காக டெல்லி முழுவதும்  பலத்த காவல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது.



ஜி 20 உச்சி மாநாட்டிற்கு ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ் இந்தியா வருவதாக இருந்தா். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அவர் மாநாட்டுக்கு வர மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக துணை அதிபர் நடியா கேல்வினோ, பொருளாதார  விவகாரங்கள் துறை மந்திரி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆகியோர் ஸ்பெயின் நாட்டின் பிரதிநிதிகளாக  ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ரஷ்யா அதிபர் புதின் மற்றும் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ள நிலையில் தற்போது ஸ்பெயின் அதிபரும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது அணை விவகாரம்: ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடகா செல்கிறார் முதல்வர் விஜய்

news

'ஜனநாயகன்' படம் பார்த்தால் சுறுசுறுப்பு வரும்: சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்

news

Tamil Poem: மருதாணி!

news

ஆடி வெள்ளிக்கிழமையன்று.. அம்மனுக்கு மஞ்சள் காப்பு.. அம்மன் வழிபாடு சிறப்புகள்!

news

எம்.எஸ். தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயஸ் ஐயர்.. டி20 போட்டிகளில் புதிய உலக சாதனை

news

சோனம் வாங்சுக்கின் 26 நாள் உண்ணாவிரதத்தை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டு வந்தது எப்படி?

news

வினாத்தாள் கசிவு.. தண்டனைகளை விரைவுபடுத்த விரைவு நீதிமன்றங்கள்.. பிரதமர் மோடி

news

காங்கிரஸ், பாஜக, திமுக - நாடாளுமன்றத்தில் தனித்தனியாக போராட்டம்

news

நீட் தேர்வு வாக்குறுதிகள் தோற்றுவிட்டன; மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது.. மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்