பாகிஸ்தான் டீமில் ஒற்றுமையே இல்லை.. ஒருவரை ஒருவர் காலை வாருகிறார்கள்.. கேரி கிர்ஸ்டன் புலம்பல்

Jun 17, 2024,06:31 PM IST

லாகூர்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தான் அணி குறித்த சில முக்கியத் தகவல்களை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் கூறியதாக வெளியான தகவல்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.


பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் மிகவும் மோசமாக ஆடி கடைசியில் சூப்பர் 8 சுற்றுக்கே தகுதி பெறாமல் வெளியேறி விட்டது. இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் அணியின் நிலைமை மோசமாக உள்ளதாக கேரி கிர்ஸ்டன் கூறியதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த ஊடகச் செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:




அணியில் ஒற்றுமை இல்லை. ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதில்லை. தனித்தே அனைவரும் இயங்குகிறார்கள். பலரிடம் பிட்னஸ் சரியாக இல்லை. பலரிடம் Passion இல்லை. வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் யாரும் விளையாடவில்லை. இப்படியே இருந்தால் கஷ்டம். நல்ல உடல் தகுதியுடன், ஒற்றுமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வீரர்களுக்குத்தான் அணியில் இடம் தரப்பட வேண்டும். அப்போதுதான் அணி வெற்றிப் பாதைக்குத் திரும்ப முடியும்.


சர்வதேச அணிகளுடன் மோதும்போது நாம் திறமையாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் பலரிடம் அந்தத் தகுதி இல்லை.  எப்படி விளையாட வேண்டும் என்பது கூட தெரியாமல் சில வீரர்கள் உள்ளனர். இது ஏமாற்றம் தருகிறது.


நான் பல அணிகளுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் இங்குதான் இப்படி ஒரு சூழலை பார்க்கிறேன். அணி வீரர்கள் நான் சொன்ன சூழலுக்கு மாற வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அவர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று கிர்ஸ்டன் கூறியதாக செய்திகள் கூறுகின்றன. 


கேரி கிர்ஸ்டன் பயிற்சியாராக இருந்தபோதுதான் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பையை வென்று அசத்தியது என்பது நினைவிருக்கலாம். 


டி20 உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தான் அணி, உப்புச் சப்பே இல்லாத அமெரிக்க அணியிடம் தோல்வியைத் தழுவி அனைவரையும் அதிர வைத்தது. அடுத்து வழக்கம் போல இந்தியாவிடமும் அது தோற்றது. கனடா மற்றும் அயர்லாந்தை மட்டுமே அது வென்றது.  ஏ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான் அணி, 2 வெற்றி, 2 தோல்வியுடன் 3வது இடத்தைப் பிடித்து வெளியேறியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

மீண்டும் ஒரு விமான விபத்து... 5 குழந்தைகள் உட்பட 49 பேர் பலி!

news

குடையை எடுத்து வச்சுக்கோங்க... 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் நலமாக இருக்கிறார்.. 2 நாளில் டிஸ்சார்ஜ்.. மருத்துவமனை அறிக்கை

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்.. பாஜகவைச் சேர்ந்தவரே வேட்பாளராக இருப்பார் என தகவல்!

news

எஸ் பாங்க் கடன் மோசடி.. அனில் அம்பானிக்கு சொந்தமான 50 இடங்களில் ரெய்டு

news

குழந்தைகளை கொன்ற வழக்கு: குன்றத்தூர் அபிராமிக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

news

பாமக கட்சி பெயர், கொடியை டாக்டர் அன்புமணி பயன்படுத்தக் கூடாது.. டாக்டர் ராமதாஸ் உத்தரவு

news

தொடர் உயர்வில் இருந்த தங்கம் திடீர் சரிவு... அதுவும் சவரனுக்கு ரூ.1,000 குறைவு!

news

Aadi Amavasai: அமாவாசை தினத்தில் சமைக்க வேண்டிய காய்கறிகள் என்ன?

அதிகம் பார்க்கும் செய்திகள்