காஸா முனை: பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் அந்த நகரமே சிதிலமடைந்துள்ள நிலையில் நிவாரண முகாம்களில் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக அங்கு சேவையாற்றி வரும் நர்ஸ் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் நடத்திய தாக்குதலால் வெகுண்ட இஸ்ரேல் அதிரடித் தாக்குதலில் குதித்தது. ஹமாஸைக் குறி வைத்து அது நடத்தி வரும் தாக்குதலால் காஸாவே சுடுகாடாகியுள்ளது. இதுவரை கிட்டத்தட்ட 10,000 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஐ.நா. உள்பட பல்வேறு நாடுகள் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தும் கூட அதை ஏற்க மறுத்து தொடர்ந்து காஸாவைத் தாக்கி வருகிறது இஸ்ரேல் ராணுவம். தற்போது காஸா நகரின் இதயப் பகுதி வரை முன்னேறி வந்து விட்டது இஸ்ரேல் ராணுவம். ஹமாஸ் படையினர் மறைந்திருக்கும் பங்கர்களைக் குறி வைத்துத் தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் போரில் சிக்கி மீட்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு நிலைமை மோசமாக உள்ளதாக அங்கு சேவையாற்றி வரும் நர்ஸ் ஒருவர் தெரிவித்துள்ளார். எமிலி கல்லஹன் என்ற நர்ஸ் இதுகுறித்துக் கூறுகையில் நான் பணியாற்றும் முகாமில் கிட்டத்தட்ட 50,000 பேர் தங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
மொத்தமே 4 டாய்லெட்டுகள்தான் உள்ளன. தினசரி 4 மணி நேரத்திற்கு மட்டுமே தண்ணீர் வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தைச் சேர்ந்த டாக்டர்களும் நர்ஸ்களும் தங்கியுள்ளனர். எப்போது வேண்டுமானாலும் மரணம் உறுதி என்று தெரிந்தும் கூட அனைவரும் உயிரை துச்சமென மதித்து சேவையாற்றி வருகின்றனர். நானும் போரில் சிக்கி மீட்கப்பட்டவள்தான். அமெரிக்காவைச் சேர்ந்த நான் இப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக சேவையாற்றி வருகிறேன்.
காஸாவில் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை. இந்த முகாம் கூட பாதுகாப்பானதாக இல்லை. இங்கு எனது குடும்பத்தினரும் தங்கியுள்ளனர். அவர்களுடன் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறேன். நாங்கள் அடிக்கடி முகாம்களை மாற்றிக் கொண்டே இருக்கிறோம். தாக்குதல் பயம் காரணமாக முகாம் அடிக்கடி மாற்றப்படுகிறது. இப்போது 5வது முறையாக மாறியுள்ளோம். இங்கு பெரும்பாலும் குழந்தைகள் அதிக அளவிலான காயங்களுடன் தங்கியுள்ளனர்.
மருத்துவமனைகளில் இடம் இல்லை. இதனால் முகாம்களிலேயே பலரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அனைவருமே சிரமப்படுகிறோம். கழிப்பறை வசதிதான் மிக மிக மோசமாக உள்ளது. எங்களிடம் மருந்துகள், பேன்டேஜுகளும் போதிய அளவில் இல்லை என்றார் அவர்.
பகுதிநேர ஆசிரியர்கள் சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் பணி நிரந்தரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
குற்றவாளிகளை காப்பாற்ற மட்டுமே திமுக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு!
8% ஆரம்பித்து 0.17 சதவீதத்தில் வந்து நிற்கும் தேமுதிக.. எதிர்பார்க்கும் சீட்டுகள் எத்தனை?
எனக்கு போட்டியாக இந்தியாவில் எந்த கட்சியும் இல்லை..பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் நான்: சீமான்
அமெரிக்காவை உலுக்கும் பெர்ன் பனிப்புயல்:. ஸ்தம்பித்த வாழ்க்கை.. காலியான சூப்பர் மார்க்கெட்டுகள்!
மக்களே தயாராக இருங்க... நாளை 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..வானிலை மையம் அறிவிப்பு!
டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வங்கதேசம் அதிரடி நீக்கம்?.. ஸ்காட்லாந்துக்கு வாய்ப்பு!
ஓபிஎஸ் - அமைச்சர் சேகர்பாபு திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் புதிய திருப்பம்?
என்னாது கேரள சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடப் போறேனா?.. பாவனா பதில்!
{{comments.comment}}