சென்னை: மதுவிலக்கு மாநாட்டை விடுதலை சிறுத்தைகள் கட்சி கையில் எடுப்பதால் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டாலும் எதிர்கொண்டு தான் தயாராக உள்ளதாக அக்கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் பரபரப்பாக பேசியுள்ளார்.
மது ஒழிப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியில், நான் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை. அவர்கள் செய்யவில்லை என நான் விமர்சிப்பதும் இல்லை. இதை தேசிய பிரச்சினையாக பாருங்கள். சமூகப் பிரச்சினையாக பாருங்கள். எவ்வளவு பெண்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். கள்ளச்சாராயம் பிடித்து கள்ளக்குறிச்சி மற்றும் மரக்காணத்தில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளச்சாராயத்தால் அனைத்து சமூகத்தினரும் பாதிக்கப்படுகிறார்கள். இதற்காக அடிமைப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இப்படி உள்ளவர்கள் அவர்களது குடும்பத்திற்கும், ஊருக்கும், நாட்டிற்கும் பாரமாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் 100% நல்ல நோக்கத்தோடு இந்த மாநாட்டை நாங்கள் ஒருங்கிணைக்கிறோம். இதில் எந்த அரசியல் கணக்கும் இல்லை என மறுபடியும் நான் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். மதுக் கொள்கை மாநாட்டை தேர்தல் அரசியலோடு யாரும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.
தேசிய மதுவிலக்கு கொள்கையை உருவாக்கி தனி சட்டம் இயற்ற வேண்டும் என்பதை திமுக வலியுறுத்த வேண்டும். மத்திய அரசும் திமுகவை வலியுறுத்த வேண்டும் என்பதால் முதல்வரை சந்திக்க இருக்கிறேன். முதல்வருடன் நடைபெறும் இந்த சந்திப்பின் போது மதுவிலக்கு மாநாடு குறித்து ஆலோசிப்பேன். அழைப்பும் விடுப்பேன். அரசியலுக்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டை நடத்தவில்லை. அதிமுகவுக்கு அழைப்பு விடுப்பது குறித்து நிர்வாகிகளோடு ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படும். மதுவிலக்கு மாநாட்டை விசிக கையில் எடுப்பதால் கூட்டணியிங் விரிசல் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம் என கூறியதுடன், அனைத்து கட்சிகளும் மதுவிலக்கு கோரிக்கைக்காக நிற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்.
சிறுகதை: இதுதான் ட்ரெண்ட்!
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
என்னை நேசிப்பவளுக்கு!
அறிவின் ஒளியே எங்கள் ஆசான்
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
கைப்புடிச்ச கண்ணாளா காலத்துக்கும் வருவீகளா!
{{comments.comment}}