நான் உயிரோடு இருக்க கூடாது... ராமதாஸ் -அன்புமணி மோதலால் மனஉளைச்சல்... ஜி.கே.மணி வேதனை!

May 31, 2025,05:58 PM IST

விழுப்புரம்: நான் உயிரோடு இருக்க கூடாது. ராமதாஸ் - அன்புமணி மோதலால் மன உளைச்சலில் தவிக்கிறேன் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.


சமீப காலமாகவே பாமகவில் உட்கட்சி பூசல் உச்சத்தை எட்டி வருகிறது. இதற்கு காரணம் அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தான் என்று சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன. இது குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில்,  நான் அடக்கத்தோடு இருந்து வருகிறேன். அரசியலில் இருப்பவர்கள் தன்னை பற்றி பந்தா பண்ணிக் கொள்வது இயல்பு. நான் அப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்று அடக்கமாக இருந்து வருகிறேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். உயிர் போகும் வரையும் சரியாக வாழ்ந்து விட்டுப் போக வேண்டும் என்று நினைப்பவன். அப்படித்தான் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றேன்.


என்னைப் பற்றி அவதூறு பரப்புவது நல்லது அல்ல. என்னை அவதூறு படுத்துவதால் அவர்களுக்கு சந்தோஷம் என்றால் மகிழ்ச்சி தான். மருத்துவர் அய்யாவும் அன்புமணியும் விரைவில் சந்திக்க வேண்டும் என்பது தான் எங்கள் இயக்கத்தின் ஆசை. அப்படி சந்தித்து விட்டால் எங்களின் இயக்கம் வீறு கொண்டு எழும்.  இது ஒரு வேதனை காலம். இதில் இருந்து மீண்டு திரும்பவும் குடும்ப பாசத்துடன் இருக்கும் கட்சியாக மாற வேண்டும்.




ஒரு நெருக்கடியான சூழல் எங்கள் கட்சியில் உருவாகியுள்ளது. அதை சரி செய்ய முயன்று வருகிறோம். 45 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் நான். எங்கள் கட்சி சிதைய வேண்டுமென்று நினைப்பேனா?.  சமூக ஊடகங்களில் என்னை பற்றி அவதூறு செய்திகள் வருகின்றன. எப்படி மனசாட்சி இல்லாமல் இப்படி எழுதுகிறார்கள். ரூமில் அமர்ந்து கண்ணீர் வடிக்கின்றேன். பொருளாளர் திலகபாமா பற்றி நான் எந்த குறையும் சொல்லவில்லை. அவரைப் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டாம் என்று ராமதாஸிடம் கூறினேன். ஐயா ராமதாஸ் மன உளைச்சல் வேதனையை எல்லாம் என்னிடம் கொட்டுகிறார். இருந்தாலும் சகித்துக் கொள்ளுங்கள் என்று கூறினேன்.  


ராமதாஸிடம் பலமுறை சொல்லிவிட்டேன் எனக்கு இருக்கும் வேதனை மன உளைச்சலை உங்களிடம் குமுறுகிறேன் என்றேன். எனது குடும்பத்திற்கும் நாட்டுக்கும் யாருக்கும் தெரியாமல் எங்கேயாவது சென்று விட வேண்டும். இல்லை எனில் நான் உயிரோடு இருக்கக்கூடாது இந்த இரண்டு தான் முடிவு என்று கூறினேன். எவ்வளவு வேதனையில் இருந்ததால் நான் இப்படி சொல்வேன்.  இந்த பிரச்சனைக்கு ஜிகே மணியோ மற்றவங்களோ இன்னொரு கட்சியோ காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. யார் சொல்லியும் கட்சியில் பிளவு இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலை தயவு செய்து அனைவரும் ஒத்துழைப்பு கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

LPG Shortage: கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... சென்னை ஹாஸ்டல்களில் இனி காபி, டீ கிடையாது!

news

சிலிண்டர் தட்டுப்பாடு : அம்மா உணவகங்களை இயக்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

news

கரூர் வழக்கு...மார்ச் 15ம் தேதி ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்

news

சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பற்றாக்குறை.. ஹோட்டல்களை மூடும் அபாயம்!

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மஞ்சள் பிள்ளையார், வெற்றிலை பாக்கு

news

என்டிஏ கூட்டணியில் விஜய் உண்மையா?...ஒரே போடாக போட்ட அண்ணாமலை

news

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்... மார்ச் 17-ல் ஆஜராவேன்- செந்தில் பாலாஜி அதிரடி

news

சமையல் எரிவாயு சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க.. மத்திய அரசு உத்தரவு

news

விஜய் குறித்த கருத்து...பாஜக செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பதவி பறிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்