தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வராத ஜி.கே.வாசன்...காரணம் இது தானா?

Mar 23, 2026,04:51 PM IST

சென்னை : அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் மட்டும் கலந்து கொள்ளவில்லை.


என்டிஏ தொகுதி பங்கீட்டை அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக என்டிஏ கூட்டணியின் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி வெளியிட்ட போது கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடன் இருந்தனர். ஆனால் ஜி.கே.வாசன் மட்டும் அதில் இடம்பெறவில்லை. அதே போல் தொகுதி பங்கீட்டு அறிவிப்பின் போது பாஜக.,விற்கு 27, பாமக.,விற்கு 18, அமமுக.,வுக்கு 11 என தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் மற்ற கட்சிகளுக்கான தொகுதிகள் எத்தனை என்பது குறித்து இன்று இரவுக்குள் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று மட்டும் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.




இதனால் ஜி.கே.வாசன் ஏன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அரசியல் வட்டாரத்தில் விசாரித்த போது, அதிமுக கூட்டணியில் 5 க்கும் அதிகமான தொகுதிகள் வேண்டும் என தமாக சார்பில் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு 3 தொகுதிகள் மட்டும் தருவதற்கு அதிமுக தலைமை ஒப்புக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. அதே போல் கடந்த முறை தராததால் இந்த முறையாவது தங்களுக்கு ஒரு எம்.பி., சீட் ஒதுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கேட்டுள்ளார். ஆனால் அதையும் தர முடியாது என கட்டணி தலைமை மறுத்து விட்டதாம்.


தங்களுக்கு எம்.பி., சீட்டும் தராமல், கேட்ட எண்ணிக்கையில் தொகுதிகளையும் ஒதுக்காததால் கடுமையான அதிருப்தியில் இருக்கிறாராம் ஜி.கே.வாசன். அதனால் தான் அவர் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், பாஜக தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாக கூறி இருந்தார். அப்படி இருந்தும் இன்றைய தொகுதி பங்கீடு கூட்டத்திற்கு அவர் ஏன் வரவில்லை என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கேட்கப்பட்டு வருகிறது.


ஜி.கே.வாசனின் இந்த நடவடிக்கை அதிமுக கூட்டணிக்குள்ளும் குழப்பம் இருப்பதை காட்டுவதாக சிலர் கூறி வருகிறார்கள். ஆனால் அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இதை திட்டவட்டமாக மறுக்கிறார்கள். ஜி.கே.வாசனிடம் விரைவில் பேசி, சுமூக முடிவு காணப்படும் என சொல்ப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சபாஷ் சரியான போட்டி.. தமிழ்நாடு சட்டசபையில் அனல் பறந்த காரசார விவாதங்கள்

news

உயிர் மூச்சு என்று நினைக்கின்ற என் உத்தமிக்கு அடியேன்!

news

வெள்ளிக்கிழமை இரவு.. "நான் தான் கெத்து!".. Weekend புத்துணர்ச்சி கலாட்டாக்கள்!

news

தமிழ்நாடு மதிப்பு கூட்டு வரி சட்ட திருத்த முன்வடிவு சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேறியது

news

கர்நாடகா செல்ல முடிவு செய்தது ஏன்? முதல்வர் விஜய் சட்டசபையில் விளக்கம்

news

செட்டிநாட்டு அடுப்படி.. காரசாரமான நான் வெஜ் சுவையில்.. அசத்தலான பலாக்காய் பிரட்டல்!

news

சோஷியல் மீடியா சமையல்ங்கிறது.. பார்க்குறப்போ ஆஹா... பண்ணி முடிச்ச அப்புறம் ஆத்தா!

news

மேகதாதுவுக்காக முதலில் கூட்டம் போடுங்க.. எம்.பிக்கள் கூட்டத்துக்கு வர்றோம்.. திமுக நிபந்தனை

news

ஆதிக்கம் செலுத்தும் ஏஐ.. மனிதர்களுக்கு இடையிலான உரையாடல்கள் குறைய ஆரம்பித்து விட்டதா?

அதிகம் பார்க்கும் செய்திகள்