"இலை இங்கே பலம்.. தாமரை அங்கே பலம்".. வாசன் அனுப்பிய மெசேஜ்!

Sep 19, 2023,09:44 AM IST

சென்னை: அதிமுக பாஜக பிரியக் கூடாது இணைந்திருக்க வேண்டும் என்று மறைமுகமாக கூறியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்.


அதிமுக - பாஜக இடையிலான உரசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு பக்க தலைவர்களும் வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கி பிடித்த கை இது என்று ஆவேசம் காட்டிப் பேசுகிறார் அண்ணாமலை.. நாக்கை வெட்டுவோம் என்று செல்லூர் ராஜூ வீராவேசம் காட்டுகிறார். வசூல் யாத்திரை என்று சி.வி.சண்முகம் நக்கலடிக்கிறார்.. பாஜக கூட்டணியில் இல்லை என்று அதிரடியாக அறிவிக்கிறார் ஜெயக்குமார்.




இப்படி இரு தரப்பும் மாறி மாறி அடித்து ஆடிக் கொண்டிருக்கிறது. மேல் மட்ட அளவில் தலைவர்கள் இப்படி டான்ஸ் ஆடி வரும் நிலையில் அதிமுக மற்றும் பாஜக தொண்டர்களிடையே மனதளவில் ஏற்கனவே இருந்து வரும் விரிசல் மேலும் பெரிதாகி வெகு தூரத்திற்குப் போக ஆரம்பித்து விட்டனர். தற்போதைய நிலையில் கூட்டணி இருக்கிறது என்று கூறி பாஜக மேலிடம் சமாதானம் செய்து வைத்தாலும் கூட இருவரும் ஒருமித்து செயல்படுவார்களா என்பது சந்தேகம்தான். அந்தளவுக்கு இரு தரப்புக்கும் இடையே வெறுப்புணர்வு அதிகரித்து விட்டது.


இந்த நிலையில் இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள் ஏதும் தொடங்கியிருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இருவரும் பிரியக் கூடாது என்று முதல் குரல் கொடுத்துள்ளார் ஜி.கே.வாசன். தமிழ்நாட்டின் நாகரீகமான அரசியல் தலைவர்களில் ஒருவராக அறியப்படும் ஜி.கே.வாசன், இதுகுறித்து ஒரு டிவீட் போட்டுள்ளார். பளிச்சென இரண்டே வரிகளில் உள்ள அந்த டிவீட்டில் ஆயிரம் செய்திகள் அடங்கியுள்ளன.


"அகில இந்திய அளவில் பாஜக பலமான கட்சி. அதுபோல் தமிழகத்தில் அஇஅதிமுக பலமான கட்சி. 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது வெற்றிக் கூட்டணியாக அமையும்" ...இதுதான் ஜி.கே.வாசன் போட்டுள்ள ட்வீட்.. இதன் மூலம் அவர் உணர்த்துவது பாஜக அகில இந்திய அளவில் பெரிய ஆள் என்றால் அதிமுக தமிழ்நாட்டில் பெரிய ஆள். இருவரும் இணைந்தால்தான் பலம். அது இணைய வேண்டும் என்பதை சூசகமாக உணர்த்தியுள்ளார் வாசன்.


வாசனுக்குத் தெரிந்த இந்த உண்மை நிச்சயம் பாஜக, அதிமுகவினருக்கும் தெரியாமல் இருக்காது.. ஆனாலும் "இரண்டு தலைவர்களின்" ஈகோ காரணமாக முட்டி மோதிக் கொண்டிருக்கும் இந்தக் கட்சியினரின் பிரச்சினைகளை பாஜக மேலிடம் தீர்க்காவிட்டால் தேர்தலில் சுமூக உறவு இருக்க வாய்ப்பில்லை.. அது நிச்சயம் தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கும் என்று அரசியல் நிபுணர்கள் அடித்துக் கூறுகிறார்கள்.

சமீபத்திய செய்திகள்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

news

உன்னை நினைப்பதையே என் மனம் காதலிக்கிறது...!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

அறிவுடையார் எல்லாம் உடையார்.. சர்வதேச எழுத்தறிவு தினம் International Literacy Day 2026!

news

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிப்பு

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்